சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குனிந்த தலை நிமிராம நடக்காதீங்க மக்களே! எப்படியெல்லாம் ஆட்டைய போட்றாங்க பாருங்க! பகீர் சிசிடிவி!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் செல்போன் பார்த்தவாறு சாலையில் நடந்து சென்ற மாணவனை பின்தொடர்ந்து வந்து செல்போனை பறித்துச் சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் குறித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது சிசிடிவி காட்சிகள் ரோந்து போலீசார் என கண்காணிப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்ட போதிலும் செல்போன் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இது போன்ற செல்போன் படிப்பு சம்பவங்களை அதிக அளவில் கல்லூரி மாணவர்களை ஈடுபடுவதாகவும் போதைப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் கூறுகின்றனர்.

பொரி சுண்டலுடன்.. சென்னை மின்சார ரயிலில் ஆயுதபூஜை செலிபிரேட்..ரயில்வே அதிகாரிகளுக்கு திடீர் உத்தரவு? பொரி சுண்டலுடன்.. சென்னை மின்சார ரயிலில் ஆயுதபூஜை செலிபிரேட்..ரயில்வே அதிகாரிகளுக்கு திடீர் உத்தரவு?

செல்போன் பறிப்பு

செல்போன் பறிப்பு

தமிழகத்தை பொறுத்தவரையில் தலைநகரான சென்னையில்தான் செல்போன் மற்றும் செயின் பதிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன ஒரு நாளைக்கு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகி வருகிறது பெண்கள் மற்றும் சாலையில் செல்போன்களை பார்த்தபடியே செல்பவர்கள் தான் இந்த கும்பலின் டார்கெட்.

மர்ம கும்பல் அட்டகாசம்

மர்ம கும்பல் அட்டகாசம்

குனிந்த தலை நிமிராமலும் காதில் செல்போனை வைத்துக் கொண்டு பேசிய படியே செல்லும் நபர்களை குறி வைத்து செல்போன்களை பறித்துச் செல்லும் இருசக்கர வாகன கும்பலின் நடமாட்டம் சென்னையில் அதிகரித்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இவர்களை பிடிப்பதற்கும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவன்

கல்லூரி மாணவன்

அந்த வகையில் சென்னையில் குனிந்த தலை நிமிராமல் செல்போனை பார்த்தபடியே சென்ற மாணவன் ஒருவரை பின் தொடர்ந்து வந்த ஒருவர் செல்போனை பறித்து சென்றிருக்கிறார். சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் அவன்யூ இரண்டாவது தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவருடைய மகனான வருண் குமார் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டிற்கு செல்போனை பார்த்தபடியே சாலையில் நடந்து சென்றிருக்கிறார்.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வரும் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றிருக்கிறார். சிறிது நேரம் துரத்தியும் அவரை பிடிக்க முடியாததால் இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வரும் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் செல்போன் பறித்துச் சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது. முடிந்தவரை சாலையில் நடக்கும் போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

English summary
Exciting CCTV footage of a mysterious person on a two-wheeler following a student who was walking on the road while looking at his cell phone in Virugambakkam, Chennai and snatched his cell phone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X