கள்ள உறவால்.. திமுக பிரமுகர் தலையை வெட்டி, குடலை உருவி கொலை.. கடலில் வீசும் திடுக் காட்சி வெளியானது
சென்னை: திமுக வார்டு பிரதிநிதி சக்கரபாணி தலை துண்டிக்கப்பட்டு உடலும் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காசிமேடு துறைமுகத்தில் உடல் பாகங்களை கடலில் கொட்டிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (65). திமுகவின் ஏழாவது வட்ட பிரதிநிதியாக இருந்தார். இவர் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணம் வாங்குவதற்காக கடந்த 10-ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பி வெளியில் சென்றதாகவும் ஆனால் திரும்பவும் வீட்டிற்கு வரவில்லை என்று குடும்பத்தினர் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

செல்போன் சிக்னல்
இந்நிலையில் செல்போன் சிக்னலை வைத்து ராயபுரத்தில் உள்ள கிரேஸ் கார்டன் பகுதிக்கு சக்கரபாணி கடைசியாக வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4வது தெருவில் முதலில் அவரது இரு சக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

தமீம் பானு
அதன்பின்னர் தமீம் பானு என்பவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் தமீம் பானுவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியபோது முதலில் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். பின்னர் நாங்கள் போலீசார் என்று கூறிய உடன் கதவை திறந்து உள்ளனர்.

வீட்டில் சோதனை
அதன் பின்னரே வீட்டில் சோதனை செய்தபோது சக்கரபாணியின் சட்டை பேண்ட் மட்டும் தனியாக கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சக்கரபாணி இங்கு வந்தாரா என்ற கேட்டதற்கு முதலில் அவர் இங்கு வரவே இல்லை என்று கூறியுள்ளனர். பின்னர் வீடு முழுவதும் சோதனை செய்ததில் தலையில்லாமல் உடலை துண்டு துண்டாக கூறு போட்டு கவரில் போட்டு பாத்ரூமில் மூடி வைத்து இருந்தனர்.

ராயபுரம் போலீஸார்
இதனை தொடர்ந்து ராயபுரம் போலீஸார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் தமீம் பானுவிற்கும் சக்கரபாணிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பவத்தால் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமீம் பானு
இந்நிலையில் தமீம் பானுவிற்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட தகராறில் வீட்டை காலி செய்து ராயபுரம் பகுதியில் வந்து குடியேறி உள்ளனர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி அன்று ராயபுரத்தில் உள்ள தமீம் பானுவின் வீட்டிற்கு சக்கரபாணி குடிபோதையில் வந்துள்ளார். அப்போது வீட்டில் தமீம்பானுவின் இரு மகள்கள் இருந்துள்ளனர்.

சக்கரபாணி
இதனால் சக்கரபாணியை வரவேண்டாம் என தமீம் பானு தடுத்துள்ளார். எனினும் அதையும் மீறி வந்த சக்கரபாணி குடிபோதையில் தமீம்பானுவை உறவுக்கு வருமாறு அழைத்துள்ளார். "இன்று வேண்டாம், நீ போய் நாளை வா, குழந்தைகள் இருக்கிறார்கள்" என தமீம் பானு தெரிவித்தாராம். ஆனால் சக்கரபாணி விடாமல் தொல்லை செய்ததால் தமீம் பானு தகராறு செய்துள்ளார்.

ராயபுரம வீடு
இந்த நிலையில் ராயபுரம் வீட்டுக்கு வந்தவுடன் தமீம்பானுவுக்கும் கீழ் வீட்டில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் டில்லி பாபுவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சக்கரபாணியுடனான உறவு தமீம்பானுவுக்கு பிடிக்காமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. அன்று இரவு தமீம்பானுவுக்கும் சக்கரபாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது அவரது தம்பி வாஷிம் பாஷாவுக்கு தெரியவர இருவரும் சேர்ந்து சக்கரபாணியை வெட்டி கொன்றுள்ளனர்.

குடலை உருவி
பின்னர் தலையையும் குடலையும் உருவி வேறு ஒரு பையில் போட்டு அடையாற்றில் கல்லை கட்டி வீசிவிட்டனர். மற்ற உடல் பாகங்களை 10 துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தவிருந்த போது போலீஸாரால் தமீம் பானுவும், வாஷிம் பாஷாவும் கைது செய்யப்பட்டனர். தலையை ஆற்றில் போட தனது ஆட்டோவில் அழைத்து சென்று உதவி, குற்றத்திற்கு துணை போன டில்லிபாபுவும் கைது செய்யப்பட்டார்.

காட்சிகள்
குடல், இதயம் உள்ளிட்ட பகுதியை காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் உள்ள கடற்கரையில் வீசியதாகவும் தெரிவித்தனர். தற்போது காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆட்டோவில் வந்து வெட்டிய உடல் பாகங்களை கடலில் கொட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications