சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிய மொழிப்போர் வெடிக்கும்.. கட்டாய இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும்.. எச்சரித்த சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: ‛‛கட்டாய இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும். கைவிட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரிய மொழிப்போர் வெடிக்கும். அப்போது சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு சந்துக்குள் கூட்டம் போடமாட்டேன்'' என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எச்சரித்தார்.

Recommended Video

    யாதவ, கோனார் சமூகங்களை இழிவுபடுத்தி பேசியதாக சீமான் மீது புகார்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

    அதன்பிறகு அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

    இந்தி படித்தால் வேலையா? 2 கோடி பேர் ஓட்டலில் மேஜை தான் துடைக்கிறாங்க.. பங்கமாய் கலாய்த்த சீமான் இந்தி படித்தால் வேலையா? 2 கோடி பேர் ஓட்டலில் மேஜை தான் துடைக்கிறாங்க.. பங்கமாய் கலாய்த்த சீமான்

    நாம் தமிழர் பேரணி

    நாம் தமிழர் பேரணி

    இத்தகைய செயல்பாட்டை கண்டித்து தமிழ்நாட்டில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்நிலையில் தான் திராவிட கட்சிகள் பாணியில் இந்தி எதிர்ப்பு எனும் ஆயுதத்தை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நாம் தமிழர் கட்சியும் அறிவித்தது. இதுதொடர்பான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு செய்தார். அதன்படி வரும் தமிழ்நாடு நாளான நவம்பர் 1ம் தேதியான இன்று சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் இருந்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

    மழையில் நடந்த பேரணி

    மழையில் நடந்த பேரணி

    இதையடுத்து இன்று மாலை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடலில் நாம் தமிழர் கட்சியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் திரண்டனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவர்கள் அனைவரும் பேரணி சென்றனர். கையில் இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். பேரணியின்போது மழை பெய்த நிலையில் அதனை பொருட்படுத்தாமல் நடந்து சென்றனர். இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    மொழிக்கலப்பில் சிதையும் தமிழினம்

    மொழிக்கலப்பில் சிதையும் தமிழினம்

    இந்தியை திணித்தால் தமிழ் அழிந்துபோகுமா? தமிழ் அழிந்துபோகும். மொழிகள் அழிந்துள்ளது. சமஸ்கிருத திணிப்பின்போது 1800 ஆண்டுகளுக்கு முன்பு தமிழோடு சமஸ்கிருதம் கலந்து பேசி 1600 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடம், தெலுங்கு மொழிகள் பிரிந்தன. வணக்கம் என்பதை நமஸ்காரம் என பேசி பிரிந்துவிட்டனர். மொழிக்கலப்பில் தமிழினம் சிதைந்து அழிந்துவிட்டது.

    தமிழ் மொழியை அழித்துவிடும்

    தமிழ் மொழியை அழித்துவிடும்

    இன்று ஆங்கிலம் கலந்து பேசி தமிழங்கிலம் பேசி வருகிறோம். 90 சதவீதம் வரை ஆங்கிலம் கலப்பு உள்ளது. அதேபோல் இந்தி வருகிறது. இந்தி வந்தால் தமிழ் மொழி அழிந்துவிடும். மொழி அழிந்தால் பண்பாடு அழிந்துவிடும். பண்பாடு அழிந்தால் இனம் அழிந்துவிடும். இனம் அழிந்தால் நாடு அழிந்துபோகும். கோதுமை வந்து சிறுதானியத்தை அழித்துவிட்டபோது தான் இந்தி வந்து தமிழ் மொழியை அழித்துவிடும்.

    பெரிய துரோகம்

    பெரிய துரோகம்

    தேசிய இனத்தின் மொழி மீது ஒற்றை மொழியை திணித்து அழிப்பது என்பது எவ்வளவு பெரிய துரோகம். இதனை எப்படி ஏற்றுக்கொள்வோம். எப்படி பொறுத்துக்கொள்வது. அதனால் கட்டாய இந்தியை மத்திய அரசு ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டும். கைவிட்டுவிட வேண்டும். அது மிகப்பெரிய மொழிப்போரை இந்த நிலத்தில் எங்களை முன்னெடுக்க தூண்டும். அப்போது சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு சந்துக்குள் கூட்டம் போடுவதை எல்லாம் நான் செய்யமாட்டேன்.

    இது ஒப்புக்கு இல்லை

    இது ஒப்புக்கு இல்லை

    நாம் ஒப்புக்கு கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து போராடவிடல்லை. உளமார போராடுகிறோம். ஏனென்றால் நாம் தூயதமிழ்தாயின் பிள்ளைகள் நாம். நாம் எழுச்சியும், புரட்சியுமாக திரண்டு வந்துள்ளீர்கள். அன்னை தமிழ் காக்கும் புரட்சி ஒருபோதும் முடியாது. வெள்ளளைக்காரர்கள் நம்மை ஆண்டதால் ஆங்கிலம் தொடர்பு மொழியாக மாறிவிட்டது. தற்போது இந்தியாவுக்குள் இந்தியை தொடர்பு மொழியாக்க வேண்டும் என்கின்றனர். இந்தியாவை விட்டு வெளியே சென்றால் எந்த மொழியில் தொடர்பு கொள்வது.

    கைவிட வேண்டும்

    கைவிட வேண்டும்


    இந்தியாவுக்குள் இந்தி தான் ஆளும் மொழி என்றால் என் தாய் மொழி என்னவாகி விட்டது?. இந்தியாவில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் கருத்து எழுந்தபோது காயிதே மில்லத் தொண்மையான தமிழ் மொழி தான் இருக்க வேண்டும் என பேசினார். இதனை நினைவில் வைத்து கொண்டு இந்தி மொழி திணிப்பை கைவிட்டு விட வேண்டும்'' என கொந்தளித்தார்.

    English summary
    Central government should forget mandatory Hindi. should be abandoned. Otherwise, a big language war will break out. Nam Tamil coordinator Seeman sternly warned that he would not hold a meeting in the alley after obeying law and order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X