சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே
சென்னை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 17-ந்தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11, 11.30, 11.45, 12.20, 12.40, 1.40, 2.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதைப்போல் தாம்பரம்-கடற்கரை காலை 11.30, 12.10, 12.30, 1.50, 2.50, 3.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில்கள் ரத்து
கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15, 12, 1, 1.20, 2, 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15, 11, 12.25, 1.25, 2.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

நாளை மாற்றம்
மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு நாளை மற்றும் வரும் 17-ந்தேதி மதியம் 1.50 மணிக்கு திருமால்பூர்-கடற்கரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரயில் சேவை
சென்னை எழும்பூா்-மங்களூரு சென்ட்ரல் இடையே முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாள்தோறும் இரவு 11.35 மணிக்கு விரைவு சிறப்பு ரயில் (06159) புறப்பட்டு, மறுநாள் இரவு 10.15 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை அடையும். இந்த ரயில் சேவை அக்.17-ஆம் தேதி தொடங்குகிறது.

முன்பதிவு
மறுமாா்க்கமாக, மங்களூரு சென்ட்ரலில் இருந்து நாள்தோறும் காலை 6.45 மணிக்கு விரைவு சிறப்பு ரயில் (06160) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் சேவை அக்.19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று தொடங்கியது.

நேரம் மாற்றம்
இதனிடையே மதுரையில் இருந்து புறப்படும் பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் உள்பட தெற்கு ரயில்வே மொத்தம் 132 ரயில்களின் நேரத்தை அக்டோபர் 1ம் தேதி முதல் மாற்றி உள்ளது. மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண் 02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 7:05மணிக்கும், திண்டுக்கல்லில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக காலை 8:05 மணிக்கும் புறப்பட்டு சென்னை சென்றடைகிறது.

என்ன மாற்றம்
ஹவுரா-கன்னியாகுமரி விரைவு சிறப்பு ரயில்( 02665) நாகா்கோவிலை காலை 9.25 மணிக்கு அடையும். இந்த ரயில் கன்னியாகுமரியை காலை 10.05 மணிக்கு சென்றடைகிறது. மும்பை சிஎஸ்எம்டி -நாகா்கோவில் விரைவு சிறப்பு ரயில்(06351) வள்ளியூா் ரயில்நிலையத்தில் காலை 6.04 மணிக்கு வந்து சேருகிறது. கன்னியாகுமரி-கேஎஸ்ஆா் பெங்களூரு விரைவு ரயில்(06525) குழித்துறை ரயில் நிலையத்தை முற்பகல் 11.04 மணிக்கு அடைகிறது. மறுமாா்க்கமாக, பெங்களூரு கேஎஸ்ஆா் -கன்னியாகுமரி விரைவு ரயில்(06526) குழித்துறை ரயில்நிலையத்தை மதியம் 1.44 மணிக்கும், இரணியல் ரயில் நிலையத்தை பிற்பகல் 2.14 மணிக்கும், நாகா்கோவில் சந்திப்பை பிற்பகல் 3.10 மணிக்கும் அடைகிறது. மதுரை-சென்னை எழும்பூா் அதிவிரைவு சிறப்பு ரயில்( 02638) தாம்பரம் ரயில்நிலையத்தை அதிகாலை 4.08 மணிக்கு வந்து சேருகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications