பூனைக்கு யார் தான் மணி கட்டுவது.. சென்னை ஏர்போர்டில் எக்ஸ்ட்ரா கேட்கும் கேப் டிரைவர்களுக்கு வார்னிங்
சென்னை: பயணிகள் கவனத்திற்கு, சென்னை விமான நிலையத்தில் கூடுதல் கட்டணம் கேட்கும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது புகார் அளிக்கலாம் என சென்னை ஏர்போர்ட்டை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை ஏர்போர்டில் அண்மை காலங்களில் எக்ஸ்ட்ரா பணம் கேட்டு புக்கிங்கை கால் டாக்ஸி டிரைவர்கள் ரத்து செய்கிறார்கள். அதேபோல் சிலர் எக்ஸ்ட்ரா பணம் தராவிட்டால் வர முடியாது. நீங்களே புக்கிங்கை ரத்து செய்து கொள்ளுங்கள் என்று கூறி வர மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இனி புகார் அளிக்கலாம் என விமான நிலையம் அறிவித்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தை இந்திய விமான நிலைய ஆணையம் நிர்வகித்து வருகிறது. சென்னை மாநகருக்குள் செல்ல பலரும் அங்கு கேப் தான் முன்பதிவு செய்கிறார்கள். ஆனால் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் கேட்டு பார்க்கிறார்கள். அப்படி கூடுதல் கட்டணம் தந்தால் தான் பயணிகளின் முன்பதிவினை ஏற்கிறார்கள். இல்லாவிட்டால், வரமுடியாது, முன்பதிவை ரத்து செய்யுங்கள் என்று சிலர் அடாவடி செயகிறார்கள். இதனால் பல பயணிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி இந்திய விமான நிலையத்திற்கு பலர் புகார் அளித்துள்ளனர். இந்த சூழலில் தான் எக்ஸ்ட்ரா பணம் கேட்கும் கேப் டிரைவர்கள் சென்னை ஏர்போர்டில் நுழைய தடை விதிக்கப்படும் என வார்னிங் வந்துள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட கால் டாக்ஸி சேவைகளை, சில ஓட்டுநர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்வதும், முன்பதிவு செயலியில் (Booking App) காட்டப்படும் கட்டணத்தைவிடக் கூடுதலாகப் பணம் கேட்பதும் தங்களது கவனத்திற்கு வந்துள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செயல்களால் பயணிகளை ஏற்றிச் செல்வதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதுடன், விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது.
#PassengerAdvisory | It has come to the notice of Airports Authority of India (AAI) that there have been instances of cab drivers cancelling confirmed bookings from Chennai Airport and demanding additional amount over and above the fares displayed in the booking apps. Such practices result in unnecessary delays in passenger pick-up and cause inconvenience to airport users.Passengers/airport users are therefore encouraged to promptly report any such instances of cancellation of confirmed rides or demands for additional payment to the respective cab service provider’s counters located at the Cab Pick-up Plaza and West MLCP. Complaints may also be lodged through the respective service providers’ official social media platforms.In case the issue remains unresolved, passengers/airport users may bring the matter to the notice of Chennai Airport through its official social media handles or by calling 044-22560551/22560512. The matter will be taken up with the concerned cab aggregator for appropriate action, which may include blacklisting of the driver and withdrawal of permission to operate at Chennai Airport.Your cooperation will help us ensure a smooth, transparent and hassle-free cab pick-up experience at Chennai Airport.Cab aggregator contacts :1.) Wti Cabs9266159355 - T19266159356 - T29159899925 - T42.) Uber99407469933.) Ola79045483054.) Fast Track80987 358525.) Rapido96295 534316.) Prepaid taxi99418 28222Parking licensee Duty Number: +91 63794 28539.Write to us at [email protected] / [email protected]. #ChennaiAirport #AAIAirports #CabPickup #AirportPickup #ChennaiAirportPickup @MoCA_GoI | @AAI_Official | @Pib_MoCA | @wticabs | @Olacabs | @rapidoapp_ | @Uber | @TaxiFastTrack
— Chennai (MAA) Airport (@aaichnairport) November 5, 2026
எனவே, உறுதிப்படுத்தப்பட்ட கால் டாக்ஸி முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தாலோ அல்லது கூடுதல் கட்டணம் கேட்டாலோ, பயணிகள் அது குறித்து உடனடியாக விமான நிலையத்தின் கேப் பிக்-அப் பிளாசா (Cab Pick-up Plaza) மற்றும் வெஸ்ட் மல்டி லெவல் கார் பார்க்கிங் (West MLCP) பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி நிறுவனங்களின் புகார் மையங்களில் தெரிவிக்கலாம்.
சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.
அங்குப் புகார் அளித்தும் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால், சென்னை விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாகவோ அல்லது 044-22560551, 044-22560512 ஆகிய தொலைபேசி எண்களிலோ புகார் தெரிவிக்கலாம்.
இந்தப் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி நிறுவனங்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுநர்களைத் தடைப் பட்டியலில் சேர்ப்பது (Blacklisting), சென்னை விமான நிலையத்தில் வாகனங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எவ்வித சிரமமுமின்றி, வெளிப்படையான முறையில் கால் டாக்ஸி சேவையைப் பெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் விமான நிலைய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
### கால் டாக்ஸி நிறுவனங்களின் தொடர்பு எண்கள்
1. WTI Cabs
- டெர்மினல் 1: 9266159355
- டெர்மினல் 2: 9266159356
- டெர்மினல் 4: 9159899925
2. Uber: 9940746993
3. Ola: 7904548305
4. Fast Track: 80987 35852
5. Rapido: 96295 53431
6. Prepaid Taxi: 99418 28222
பார்க்கிங் ஒப்பந்த நிறுவனத்தின் அவசரத் தொடர்பு எண்: +91 63794 28539
மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்க:
- [email protected]
- [email protected]
இவ்வாறு இந்திய விமான நிலையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மட்டுமல்ல.. சென்னை, கோவை முழுக்கவே இந்த பிரச்சனை இருப்பதாகவே பயணிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு ஆப் நிறுவனங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அப்படி எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் கேப் நிறுவனங்கள் எடுத்ததாக தெரியவில்லை.. தனக்கு வந்தால் தான் தலைவலி தெரியும் என்பார்கள். அதிகாரிகள் பாதிக்கப்பட்டால் தான் இந்த பிரச்சனைக்கு விடிவு பிறக்கும் என நெட்டிசன்கள் குமுறுகிறார்கள.




Click it and Unblock the Notifications
