ஆட்டோவில் வைத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்.. சென்னை அம்பத்தூர் அருகே வெறிச்செயல்!
சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே ஆட்டோவில் வைத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஆட்டோவில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் மனைவியை ஓடும் ஆட்டோவில் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார் அவரது கணவர். வைதேகி என்ற பெண்ணுக்கும், ஆட்டோ ஓட்டுநரான அவரது கணவர் சின்னாவுக்கும் இடையே சண்டை இருந்து வந்துள்ளது.

வைதேகி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சின்னாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர் மனைவியுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து சில காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆட்டோவில் செல்லும்போது சின்னா, வைதேகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், சின்னா, வைதேகியின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் கத்தியால் குத்தியுள்ளார்.
ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த வைதேகியை விரட்டி விரட்டி குத்திக் கொன்றுள்ளார். கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல வீட்டுக்குச் சென்று படுத்திருந்த சின்னாவை, சிசிடிவி காட்சிகள் மூலமாக கண்டறிந்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
