சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு மணி நேர கனமழையில் நிரம்பி வழியும் சென்னை வேப்(ஏரி) ! எல்லா (ஏரி)யாவும் தான்..!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு மணி நேரம இடைவிடாமல் பெய்த மழைக்கே சென்னை வெள்ளக்காடாக மாறி உள்ளது. சென்னை வேப்(ஏரி) நிறைந்துவிட்டது.

தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒருமணி நேரமாக கனமழை பெய்துள்ளதால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

அண்ணா நகர், கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி சாலைகள் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை சற்று குறைந்துள்ள போதிலும் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். தொடர் கனமழை காரணமாக, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மழை நீர் தேங்கி உள்ளது. குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அவதி அடைந்துள்ளனர்.

1 மணி நேர மழைக்கே இப்படி.. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிலைமையை பாருங்க 1 மணி நேர மழைக்கே இப்படி.. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிலைமையை பாருங்க

வெள்ளம்

கடந்த ஒரு மணி நேரம் பெய்த மழையில் வேப்(ஏரி) சாலை முற்றிலும் நிறைந்துள்ளது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனங்கள் சில நீரில் மூழ்கி கிடக்கின்றன. மக்கள் அந்த பகுதியில தட்டுத்தடுமாறி வீட்டுக்கு சென்று வருகிறார்கள்.

பாதைகள் ஆக்கிரமிப்பு

சரியான திட்டமிடல் இல்லாமல் நகர பெருக்கம் அதிகரித்துள்ள சென்னையில், கழிவுநீர்கள் செல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட வழிகளைப்போல் மழை நீர் செல்ல வழிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஏன் பல வழிகள் அடைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனால் நீர் அதன் பாதையையும் வழியையும் தேடி சென்றுவிட்டது.

சென்னை நிச்சயம் தாங்காது

வெறும்ஒருமணி நேர மழையையே சென்னையால் தாங்க முடியவில்லை என்கிற நிலையில் இனி தான் வடகிழக்கு பருவ மழை அதிதீவிரமாக பெய்யத்தொடங்கும். ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழை வங்ககடலின் கரையில் உள்ள சென்னையில் ஏற்படுத்தி வரும் விளைவுகள் மிக மோசமானது. ஒரே நாளில 20 செமீ மழையோ, 10 செமீ மழையோ பெய்தால் மிக விபரீதமான விளைவுகள் ஏற்படும்.

பாடம் கற்க வேண்டும்

பாடம் கற்க வேண்டும்

ஒரு பக்கம் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பருவ மாறுபாடு ஏற்பட்டு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய பகுதியில் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை மிகப்பெரிய அளவில் பேய் மழை பெய்கிறது. அதேபோல் மழையே பெய்யாமல் வறட்சியும் ஏற்படுகிறது. இதை தடுப்பது என்பது வெறும் இந்தியாவின் கையில் மட்டும் இல்லை என்பதே உண்மை. எனவே மழை மோசமாக பெய்தால் தாங்கும் அளவுக்கு நகரின் வெள்ள வடிகால் கட்டமைப்பை மாற்றாவிட்டால் 2015 சென்னை வெள்ளமும் சரி, 2020ல் ஹைதராபாத் வெள்ளமும் சரி கற்றுக்கொடுத்த பாடத்தைப்போல் மீண்டும் ஒரு பாடத்தை சென்னை சந்திக்கும் அபாயம் உள்ளது.

English summary
Chennai Thunderstorms happening with heav Rains continuing for nearly an hour over many places. Chennai city right now heavy flooded, see the videos
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X