வாவ் நம்ம சென்னையா இது.. சிற்பங்களாய் உலா வரும் வாகனங்கள்.. ஊரே சூப்பரா மாறிப் போச்சு!
சென்னை: சென்னை மாநகரில் புதிதாக ஒரு அட்ராக்ஷன் இணைந்துள்ளது.
Recommended Video
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிங்கார சென்னை கனவை நனவாக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகர ஆணையர் மேற்கொண்டு வருகிறார்.
அதன்ஒரு பகுதியாக பல்வேறு வழக்குகளில் சிக்கிய வாகன கழிவுகளை பயனுடையதாக மாற்ற திட்டமிடப்பட்டது.

காயலான் கடை வண்டிகள்
அதேபோல் பேசின் பிரிட்ஜ், புதுப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி வாகனங்களை பழுது நீக்கும் நிலையங்களில் இருக்கும் காலாவதியான வாகனங்களையும் பயனுடையதாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

வாகனக் கழிவுகளிலிருந்து மீன்
அதன்படி வாகன கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட மீன், நண்டு, இறால் ஆகிய பிரம்மாண்ட.. கண்கவர் சிற்பங்கள் மெரினா கடற்கரையின் புல்வெளிகளில் தற்போது ஒய்யாரமாக காட்சியளிக்கின்றன. மெரினாவுக்கு வரும் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் சிற்பங்களை கண்டு ரசிப்பதுடன் அருகில் நின்று செல்ஃபி எடுத்தும் மகிழ்கின்றனர்.

செம ஐடியா
இதற்காக சென்னை மாநகராட்சிக்கு பாராட்டையும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேசிய சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இந்த பணிகளுக்காக 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மக்கள் அதிகம் கூடும் பெசன்ட் நகர் கடற்கரை, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலைகள் வைக்கப்படவுள்ளன.

பிரமாண்டி சிலைகள்
அதேபோல மக்கள் அதிகம் வரும் கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற சிலைகள் வைக்கப்படும் என்றும் கூறினார். ஏற்கனவே இதுபோல ஐசிஎப்பில் ஒரு பிரமாண்ட சிலை வைக்கப்பட்டு மக்களைக் கவர்ந்துள்ளது என்பது நினைவிருக்கலாம். இதேபோல இப்போது சென்னை முழுவதும் வைக்கப்படுகிறது.

சீர்மிகு சென்னை
வரும் நாட்களில் இதுபோன்று வாகன கழிவுகளிருந்து சிற்பங்கள் செய்து சென்னை மாநகரின் முக்கிய இடங்களில் வைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். வெளிநாடுகளில்தான் இதுபோல வைப்பார்கள். இப்போது சிங்கார சென்னை சிற்பங்களின் சென்னையாக.. கண்ணையும்.. கருத்தையும் கவரும் சென்னையாக மாறியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
-
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications