Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலதெய்வம் கோயிலுக்கு போய்விட்டு.. காரில் சென்னை திரும்பிய குடும்பம்.. திண்டிவனம் அருகே நடந்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை சேர்ந்த குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் ஒன்றாக சென்றனர். கோவிலுக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பிய போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை காரனோடை பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). இவரது மகன் வெங்கட்குமார் (35). கோவிந்தராஜ் குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வரை பிளான் செய்தார். இவரது குலதெய்வம் கோவில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் உள்ளது.

chennai-family-of-three-dies-in-car-crash-near-tindivanam

குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர்

இந்த நிலையில் கோவிந்தராஜ் அவரது மனைவி திருப்பாவை (48), வெங்கட்குமார், அவரது மனைவி கல்பனா வள்ளி (30), இவர்களது மகள்கள் மிருதலாஶ்ரீ, அனன்யாஸ்ரீ, கோவிந்தராஜியின் மகள் பிருந்தா, மருமகன் சரவணன் உள்ளிட்டோர் காரில் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று மாலை மீண்டும் அதே காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.

அப்போது காரை வெங்கட்குமார் ஓட்டி வந்தார். நேற்று இரவு 7 மணியளவில் காரானது விழுப்புரம் - சென்ளை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே தென்பசியாரில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் லேசாக மோதியது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தாறுமாறாக சென்ற கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

3 பேர் உயிரிழப்பு

இதில் கார் நொறுங்கிப் போனது. மேலும் காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும், அங்கு விரைந்து வந்த மயிலம் போலீசார் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய கோவிந்தராஜ், அவரது மனைவி திருப்பாவை, வெங்கட்குமார் மனைவி கல்பனா வள்ளி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் காயமடைந்த வெங்கட்குமார், மகள்கள் மிருதலாஶ்ரீ, அனன்யாஸ்ரீ, கோவிந்தராஜியின் மகள் பிருந்தா, மருமகன் சரவணன் ஆகியோர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இதன் பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக விழுப்புரம் - சென்ளை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார் விபத்துக்குள்ளாகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+