சென்னை அம்பத்தூரில் ஷாக்.. மருமகளை கத்தியால் தாக்கிய மாமனார் கைது.. நாத்தனாரும் கைது
சென்னை: சென்னை அம்பத்தூரில் கணவரை பிரிந்த வாழும் மருமகள் வீட்டை விட்டு வெளியேற மறுத்ததால் கத்தியால தாக்கிய பெண்ணின் மாமனார் மற்றும் நாத்தனாரை போலீசார் கைது செய்தார்கள்.
சென்னை அம்பத்தூரில் கணவரை பிரிந்து வாழ்ந்து வருபவர் டெய்சி. இவரது மாமானார் ஜெகநாதன், இவருடைய நாத்தனார் மலர்விழி ஆகியோர். இவர்கள் கணவனை பிரிந்து விட்டதால் தங்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு டெய்சியிடம் கூறியுள்ளனர்.
ஆனால் டெய்சியோ வீட்டை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே வசித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார் ஜெகநாதன் மற்றும் நாத்தனார் மலர்விழி ஆகியோர் டெய்சியிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றி டெய்சியை அவரது மாமனார் ஜெகநாதன் கத்தியால் குத்தியுள்ளார்.

இருவர் கைது
அப்போது வாக்குவாதம் முற்றி டெய்சியை அவரது மாமனார் ஜெகநாதன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த டெய்சியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஜெகநாதன், நாத்தனார் மலர்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சின்னமனூர்
இதேபோன்ற இன்னொரு குற்றச்சம்பவம் தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்துள்ளது. இதில் மாமனாரை மருமகன் தாக்கியுள்ளார். தேனிமாவட்டம் சின்னமனூர் அ ருகே முத்துலாபுரம் துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (59) விவசாயி. இவரின் மருமகன் ஹரிச்சந்திரன் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மருமகனும் மகளும் பிரிந்து வாழ்கின்றனர்.

பயணம்
இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஆண்டிச்சாமி தனது பேத்தி சவுந்தர்யாவை டூவீலரில் அழைத்துக்கொண்டு துரைசாமிபுரத்தில் இருந்து ஊத்துப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

மாமனார் படுகாயம்
அப்போது அவர்களை வழிமறித்த ஹரிச்சந்திரன் மற்றும் அவரது தம்பி மூவேந்திரன் இருவரும் ஆண்டிச்சாமியை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஆணடிச்சாமி சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் இருவர் மீது வழக்குபதிந்து விசாரிக்கிறார்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications