மிரட்டும் மழை..சென்னை தத்தளிக்கப்போகிறது..போட் ரெடி பண்ணுங்க..அண்ணாமலை அலர்ட்
சென்னை: பருவமழை காலத்தில் சென்னை தத்தளிக்கப்போகிறது என்றும் மழைநீர் வடிகால் பணிகள் சரிவர நடக்கவில்லை எனவே, வெள்ளத்தை சமாளிக்க எல்லோரும் போட் ரெடி செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. மழைக்காலத்திற்கு முன்பே சென்னையில் அவ்வப்போது பெய்யும் லேசான மழைக்கே பல இடங்களில் வெள்ளநீர் தேங்கி வருகிறது. பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே பருவமழை காலத்தில் பெருவெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது. எனவே மழை காலத்தில் வெள்ளநீர் தேங்காமல் தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் கொசஸ்தலையாறு வடிகால் திட்டம், கோவளம் வடிகால் திட்டம், சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் என பலவகையான திட்டங்களில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. புதிதாக வடிகால்கள் அமைப்பது மட்டுமின்றி, ஏற்கெனவே இருக்கிற வடிகால்களில் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவிகிதம் நிறைவு பெற்று விட்டதாக ஆளும் அரசு கூறி வருகிறது. ஆனால் மழை நீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்பது பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பருவமழை காலத்தில் சென்னை தத்தளிக்கப்போவதாக கூறினார். மழைநீர் வடிகால் பணிகள் முழுமை பெறவில்லை என்றும் அனைவரும் போட் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தி தெரியாது என்று கூறும் திமுகவினர் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் கூட தமிழை கட்டாயமாக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் அண்ணாமலை.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications