முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ் காவல்.. ஹைகோர்ட் உத்தரவு.. அடுத்தது என்ன?
சென்னை: துணை நடிகை புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
துணை நடிகையும் மலேசியா தூதரக அதிகாரியுமான சாந்தினி அ.தி.மு.க முன்னாள் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் துணை நடிகை சாந்தினி புகார் கொடுத்து இருந்தார்.

கைது செய்தனர்
இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் மணிகண்டன் தலைமறைவானார். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் ஜூன் 20 ஆம் தேதி கைது செய்தனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஜாமீன் கோரி மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:- தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது; உண்மைக்குப் புறம்பானது.

ஆதாரங்கள் இல்லை
திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை. எனக்கு புகார் அளித்தவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல. நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளவர். ஏற்கனவே நான் திருமணமானவன் என்று அவருக்கு தெரியும். இந்த நிலையில் எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

நான் நிரபராதி
நான் கொடுத்த 5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோதுதான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. மற்றபடி நான் நிரபராதி. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன்' என்று மணிகண்டன் கூறி இருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

2 நாள் போலீஸ் காவல்
அப்போது மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசாருக்கு அனுமதி அளித்தார். முன்னதாக மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி மறுத்த சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவையும் நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.

வழக்கறிஞர்கள் சந்திக்கலாம்
ஜூலை 3, 4 ம் தேதிகளில் மணிகண்டனை மதுரை அழைத்து சென்று அவரது செல்போனை கண்டுபிடிக்க விசாரணை நடத்த அனுமதி அளித்தும், மணிகண்டனை வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மணிகண்டனை காவலில் வைத்து விசாரணை செய்வதை ஊடக விசாரணைக்கு பயன்படுத்த கூடாது என்று தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications