சிறுநீர் சேட்டை வழக்கு.. டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன்! விசாரணைக்கு ஆஜராக சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஏபிவிபி அமைப்பை சேர்ந்த டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருபவர் சண்முகம். டாக்டரான இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் தலைவர் பதவியையும் வகித்து இருக்கிறார்
இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.

2 ஆண்டுக்கு பின் கைது
இந்த சம்பவத்தின்போது அவர் ஏபிவிபின் தேசிய தலைவராக இருந்தார். இந்த நிலையில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கடந்த 19ம் தேதி திடீரென்று சுப்பையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

இடைக்கால ஜாமீன்
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். குறுக்கிட்ட நீதிபதி, 'இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக எந்தவிதமான முன்னேற்றம் இல்லாதபோது சட்ட பிரிவுகளை மாற்றியமைத்து மீண்டும் வழக்கு பதிய என்ன காரணம்' என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் மருத்துவர் சுப்பையாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இன்று விசாரணை
அத்துடன் வழக்கில் தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 24க்கு தள்ளிவைத்தார். அதன்படி இன்று வழக்கு விசாரணை வந்தது. சம்பவம் நடந்து ஒன்னரை ஆண்டுகளுக்கு பிறகு ஏன் கைது செய்யப்பட்டார்?. சனிக்கிழமையன்று ஏன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு போலீஸ் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‛‛போலீஸ் துறைக்கு சனி, ஞாயிறு என்றெல்லாம் கிடையாது. மார்ச் 6ம்தேதி அன்றுதான் சாட்சி வாக்குமூலம் அளித்ததால் கைது செய்யப்பட்டார்'' என்றார்.

ஜாமீன் வழங்கல்
இருப்பினும் வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications