சென்னையில் தன் பேச்சை மீறி உறவினர் நிகழ்ச்சிக்கு போன மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு
சென்னை: சென்னை மதுரவாயல் அருகே தன் பேச்சை மீறி மனைவி உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றதால் கனவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மதுரவாயல், சக்கரபாணி நகர், 14வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(31), இவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ரம்யா இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று அரக்கோணத்தில் உள்ள ரம்யாவின் உறவினரின் வீட்டில் நடந்த காரிய நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என மனைவி ரம்யா கணவரிடம் கேட்டதாகவும் உறவினர் நிகழ்ச்சிக்கு செல்ல கூடாது என கணவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மனஉளைச்சல்
ஆனால் கணவரின் பேச்சை மீறி ரம்யா உறவினரின் நிகழ்ச்சிக்கு குழந்தைகளை அழைத்து கொண்டு அரக்கோணம் சென்று விட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சந்திரசேகர் மது போதையில் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இறந்துகிடந்த சந்திரசேகர்
இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது சந்திரசேகர் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன சந்திரசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிகள்
இன்னொரு குற்ற சம்பவம் குடும்ப பிரச்னையில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை திருப்பூர் போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார், இந்த சம்பவம் தொடர்பாகவும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

உயிரிழந்த காதலி
தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரை சேர்ந்தவர் அருண்குமார், 23. இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், போயம்பாளையம், பழனிசாமி நகரை சேர்ந்த வைஷ்ணவி, 19 என்பவரை, காதலித்து, திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், பாண்டியன் நகர், பண்ணாரியம்மன் நகரில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம், வெளியே சென்று விட்டு தம்பதியர் வீட்டுக்கு திரும்பினர்.வெகு நேரமாக வீட்டு கதவு திறக்காத காரணத்தால், அக்கம்பக்கத்தினர் வீட்டை சென்று பார்த்தனர். வீட்டுக்குள் வைஷ்ணவி இறந்து கிடந்தார்.

தலைமறைவு
இதுகுறித்து தகவலின் பேரில், திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், அருண்குமார் வைஷ்ணவி, தம்பதியர் மத்தியில், அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. அதேநேரத்தில், மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, சொந்த ஊருக்கு அருண்குமார் சென்று விடுவது வழக்கம். மீண்டும் பிரச்னை ஏற்பட, மனைவி கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு தப்பி சென்றுள்ளார். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications