இந்தியாவிலேயே பெஸ்ட் கல்வி நிறுவனம் சென்னை ஐஐடிதான்.. மத்திய அரசு வெளியிட்ட லிஸ்ட்.. செம செய்தி!
சென்னை: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருக்கிறது. மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் எல்லா வருடமும் மத்திய அரசு மூலம் வெளியிடப்படும். அந்த கல்வி நிறுவனத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகள், மாணவர்கள் வெளியிடும் ஆராய்ச்சி கட்டுரைகள், ஆய்வுகள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் திறன் உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் கருத்தில் கொள்ளப்படும்.
வருடம் முழுக்க அந்த நிறுவனம் எப்படி செயல்படுகிறது. மாணவர்களின் வேலை வாய்ப்பு அங்கு எப்படி உள்ளது என்று இதில் கருத்தில் கொள்ளப்படும்.

சென்னை சாதனை
இந்த நிலையில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதற்கான பட்டியலை இன்று வெளியிட்டார். மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருக்கிறது. அதன்படி தேசிய தரவரிசை பட்டியல் நிறுவனமான NIRF தயாரித்துள்ளது.

டெல்லி நிலை
டெல்லியில் இருக்கும் இன்னொரு சிறப்பான கல்வி நிறுவனமான டெல்லி ஐஐடி 2ம் இடத்தை பிடித்து இருக்கிறது. மும்பை ஐஐடி 3ம் இடத்தை பிடித்த்து இருக்கிறது. இந்தாண்டு 9 ஐஐடி கல்வி நிறுவனங்கள் இதில் இடம்பிடித்துள்ளது. முதல் எட்டு இடங்கள் முழுக்க ஐஐடி மட்டுமே உள்ளது. ஐஐடி இல்லாத வேறு ஒரு கல்வி நிறுவனமும் இதில் பட்டியலில் உள்ளது.

திருச்சியில் எப்படி
திருச்சியில் இருக்கும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் திருச்சி மட்டும்தான் இதில் இருக்கும் ஐஐடி இல்லாத ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்த பட்டியலில் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் திருச்சி 9வது இடமா பிடித்து இருக்கிறது. தமிழகத்திற்கு இது இன்னொரு பெருமை ஆகும்.

செம நியூஸ்
மொத்தம் 5805 கல்வி நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது . சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான ரேங்கிங் பட்டியலில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications