சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8800 டன்.. "மாஸ் கிளீனிங்".. லாக்டவுனை பயன்படுத்தி சென்னையை "சிங்காரமாக" மாற்றிய தமிழ்நாட்டு அரசு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் லாக்டவுன் நிலவும் நிலையில், அதை பயன்படுத்திக்கொண்டு சென்னையை சுத்தம் செய்யும் பணியில் தமிழ்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக சென்னையில் அதிக குப்பை, கூளங்கள் இருக்கும் பகுதிகளை பார்த்து பார்த்து சுத்தம் செய்கிறார்கள்.

Recommended Video

    Lockdown-ஐ பயன்படுத்தி Chennai-யை சிங்காரமாக மாற்றிய Tamilnadu அரசு!

    சென்னையை வடிவமைத்த நபர்களில் மிக முக்கியமானவர் சென்னையின் முன்னாள் மேயர்.. இந்நாள் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின். சென்னையில் தற்போது இருக்கும் பெரும்பாலான பாலங்கள் முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த போது கொண்டு வந்தது.

    சென்னையை சிங்கார சென்னையாக மாற்றியதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னையில் குப்பைகள் அதிகம் ஆகி, சாக்கடைகள் தூர்வாரப்படாமல், பல தெருக்கள் நாற்றம் அடிக்கும் அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டது.

    சென்னை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்...மழையும் பெய்யும் சென்னை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்...மழையும் பெய்யும்

    சுத்தம்

    சுத்தம்

    மக்கள் தொகையும் சென்னையில் அதிகமாகிக்கொண்டு கொண்டே இருப்பதால், சென்னையின் பெரும்பாலான பபகுதிகளை சுத்தம் செய்ய முடியாமல் சென்னை மாநகராட்சி நிர்வாகமும், அரசும் கஷ்டப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் தற்போது தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டு அரசு லாக்டவுனை பயன்படுத்திக்கொண்டு சென்னையில் பெரிய அளவில் சுத்தப்படுத்தும் பணிகளை செய்து வருகிறது.

    எப்படி

    எப்படி

    சென்னையை சிறு சிறு பகுதிகளாக பிரித்து, ஏரியா வாரியாக சுத்தம் செய்து வருகிறார்கள். முதலில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் குப்பைகளை நீக்கும் பணி ஒரு பக்கம் நடக்கிறது. இன்னொரு பக்கம் கூவம் நதி ஓடும் பகுதியில் உள்ள குப்பைகள், அங்கு வீடுகளை சுற்றி ஓடும் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. அதன்பின் சென்னையின் முக்கிய தெருக்களில் இருக்கும் சாக்கடைகள் எல்லாம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

    குப்பைகள்

    குப்பைகள்

    முக்கியமாக சென்னையில் பல தெருக்களில், பல வருடமாக தூர்வாரப்படாமல் இருந்த சாக்கடைகள் தூர்வாரப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எல்லோரும் இதற்காக களத்தில் நிற்கிறார்கள். சென்னையில் உள்ள திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் எல்லோரும் தங்கள் தொகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகளை நேரில் நின்று கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    தூய்மை பணிகள்

    தூய்மை பணிகள்

    முக்கியமாக சேப்பாக்கம் ராயப்பேட்டை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தினமும் 2-3 தெருக்களை சுத்தத்தப்படுத்த உத்தரவிட்டு, மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு, அதற்கு ஏற்றபடி தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் அதிக குப்பைகள் காணப்பட்ட அனைத்து ஏரியாக்களும் துடைத்து எடுக்கப்பட்டு தற்போது சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மலைப்பு

    மலைப்பு

    அதிலும் இது தொடர்பாக வெளியாகி இருக்கும் புள்ளி விவரங்கள் மலைக்க வைக்கின்றன. 6600 டன் குப்பைகளும், 2200 குப்பைகள் அல்லாத தேவையற்ற பொருட்களும் நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8800 டன் குப்பைகள், தூசுகள் அகற்றப்பட்டுள்ளது.

    மாஸ் கிளீனிங்

    மாஸ் கிளீனிங்

    இதற்காக சென்னையில் மாஸ் கிளீனிங் கேம்ப் என்ற முகாமை நடத்தி வருகிறார்கள். லாக்டவுன் என்பதால் மக்கள் வெளியே வருவது இல்லை. சாலைகள் ஃபிரியாக உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு சென்னையை மொத்தமாக சுத்தம் செய்யும் பணியில் தமிழ்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.

    English summary
    Chennai is back: Tamilnadu government is doing mass cleaning camps in the capital using lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X