இனிமே மொத்தமாக மாற போகுது.. சென்னை மெட்ரோவில் பைக் பார்க் பண்ண போறீங்களா.. உடனே இதை படிங்க
சென்னை: சென்னை மெட்ரோவில் ஜூன் 14ம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கடந்த சில நாட்களாக செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் தற்போது விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இன்னொரு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ சேவை உள்ளது.
இன்னொரு பக்கம் கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் மெட்ரோ பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.
புதிய சேவை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.
சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
தினசரி பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் மெட்ரோவில் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி உள்ளது. ஒரு காலத்தில் தினசரி பயணம் செய்யும் நபர்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் என்று இருந்தது.
தற்போது இதை 7 லட்சம் என்ற அளவிற்கு தினசரி உயர்த்தவும் தமிழ்நாடு அரசு,மெட்ரோ நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.
மாற்றங்கள்: இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோவில் பல முக்கிய மாற்றங்களை செய்வதற்கான ஆலோசனைகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கூடுதல் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களை வாங்குவது பற்றி ஆலோசனை செய்து வருகிறது. அதேபோல் மெட்ரோ நிலையங்களை மொத்தமாக மாற்றி புதிய வடிவத்தை கொடுக்கவும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) முடிவு செய்துள்ளது.
எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய ₹2,800 கோடி செலவில் ஒரு பெரிய மேம்படுத்தல் திட்டத்தை செயல்படுத்தவும் மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை உயர்வதை மனதில் வைத்து ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. எதிர்காலத்தை மனதில் வைத்து ரயில்களை அடிக்கடி மாற்றுவது என்று பல புதிய மாற்றங்களை செய்ய தமிழ்நாடு -அரசும் மெட்ரோ நிர்வாகமும் முடிவு செய்துள்ளது.
மெட்ரோ பயன்பாடு: மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. அதன் ஒரு கட்டமாக சென்னை மெட்ரோவில் ஜூன் 14ம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல், பார்க்கிங் மட்டும் செய்வோருக்கு கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 6 மணி நேர பார்க்கிங் கட்டணம் ரூபாய் 10ல் - 20ஆக உயர்த்தப்படுகிறது. ஜூன் 14 முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 6 மணி நேரத்திற்கான மாதாந்திர கட்டணம் 1500 - 7700ஆக உயர்த்தப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரே டிக்கெட்: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ளது. இதற்கான சிங்கார சென்னை கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும்.
எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுண்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications