“அசிங்கம்”.. செக்ஸ் டார்ச்சர்! மாணவிக்கே ஆபாச மெசேஜ் - சென்னை கல்லூரி முதல்வர் சிறையில் அடைப்பு
கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரஹாம் மாணவி ஒருவருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது.
சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமை சைதாப்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளின் புகார் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து கல்லூரி முதல்வரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்.
சென்னை நந்தனத்தில் அமைந்து உள்ளது ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி கல்லூரி.
உடற்கல்வி கல்லூரிகளில் முக்கியமான கல்லூரியாக உள்ள இங்கு ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியின் முதல்வராக இருப்பவர் ஜார்ஜ் ஆப்ரஹாம். இவர் மீது கல்லூரி மாணவிகள் தொடர்ந்து பாலியல் புகார்களை சுமத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

கல்லூரி முதல்வர் மீது புகார்
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற் கல்வியியல் கல்லூரியில் முதல்வராக இருந்து வரும் ஜார்ஜ் ஆபிரஹாம் என்பவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் போராட்டம்
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கல்லூரி முதல்வர் ஜான் ஆபிரஹாம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை மாற்றி புதிய முதல்வரை நியமிக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆபாச மெசேஜ்
பல மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரஹாம் மாணவி ஒருவருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது.

உறுதியான பாலியல் தொல்லை
இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி முதல்வர் ஜார்ஜ் ஆபிரஹாம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது உடற்பயிற்சி கூடத்தில் கல்லூரி முதல்வர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதை உறுதி செய்தனர்.

சிறையில் அடைப்பு
ஜார்ஜ் ஆபிரஹாம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கல்லூரி முதல்வரே மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டு கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications