ஒரு நொடிதான்.. மீன் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு - சென்னையில் பரிதாபம்
சென்னை: சென்னையில் மீன் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்களின் அலட்சியத்தாலேயே அந்தக் குழந்தை உயிரிழந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. புதிதாக நடக்க பழகிய குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவனம் அவசியம்..
பொதுவாக, பிறந்த புதிதில் குழந்தைகளை பார்ப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. குழந்தையின் பசிக்கு பாலூட்டி, அதை தூங்க வைப்பதே தாய்மார்களின் வேலையாக இருக்கும். ஆனால், குழந்தைகள் நடக்க ஆரம்பித்தவுடன் அவற்றை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். ஏனெனில், அந்தக் குழந்தைகள் நடை பயின்ற மகிழ்ச்சியில் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்கவும், கைக்கு எட்டும் பொருட்களை எடுக்கவும் முயற்சிக்கும். இந்த சமயத்தில்தான் நிறைய விபத்துகளும் நிகழும். உதாரணமாக, சூடான பாலோ அல்லது வேறு ஏதோ பொருள் இருக்கும் பாத்திரத்தை தன் மீது குழந்தைகள் கவிழ்த்துக் கொள்ளும். இல்லையெனில், வீட்டில் இருக்கும் வாளிகள் போன்றவற்றினுள் தலையை விட்டு அதனுள் கவிழ்ந்துவிடும். இது பல நேரங்களில் உயிரிழப்பு வரை செல்லக்கூடும். அப்படியொரு பரிதாப சம்பவம்தான் சென்னையில் நடந்துள்ளது.

குழந்தையை தனியாக விட்டு..
சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூரில் உள்ள வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் மீனாட்சி என்ற குழந்தையும் உள்ளனர். இதனிடையே, நேற்று வழக்கம் போல யுவராஜ் காலையில் வேலைக்கு சென்றுள்ளார். கவுசல்யாவும், குழந்தை மீனாட்சியும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது குழந்தையை தனியாக விட்டுவிட்டு கவுசல்யா சமைப்பதற்காக சென்றிருக்கிறார்.

மீன் தொட்டிக்குள்..
அப்போது குழந்தை மீனாட்சி, தனது கையில் உள்ள விளையாட்டுப் பொருளை தரையில் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்குள் போட்டுள்ளது. பின்னர், அந்த விளையாட்டுப் பொருளை எடுக்க முயற்சித்த போது, மீன் தொட்டிக்குள் குழந்தை தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதனால் குழந்தையின் முகம் மீன் தொட்டியில் இருந்த நீருக்குள் புதைந்துள்ளது. இந்நிலையில், குழந்தையின் சத்தம் நீண்டநேரம் கேட்காததால், கவுசல்யா அங்கு வந்து பார்த்துள்ளார்.

பரிதாபம்..
அப்போது குழந்தை மீன் தொட்டிக்குள் விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கவுசல்யா, குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications