கடைசி நாளிலும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - சிரமமின்றி பயணிப்பதாக மகிழ்ச்சி
சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு லட்சக்கணக்கான மக்கள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பயணித்துள்ளனர். இந்நிலையில் நாளை தீபாவளி என்கிற நிலையில், இன்றும் சொந்த ஊருக்கு செல்ல ஏராளமான மக்கள் செல்ல படையெடுத்தனர். இன்று சிறப்பு பேருந்துகள் காரணமாக சிரமம் இன்றி பயணிக்க முடிவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளியைக் கொண்டாடசொந்த ஊா்களுக்குச் செல்வோரின் வசதிக்காக திங்கள்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 391 எண்ணிக்கையிலும், பல்வேறு இடங்களில் இருந்து பிற ஊா்களுக்கு 894 பேருந்துகள் என மொத்தம் 1,285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
நேற்றும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் பேருந்துகள் நேற்று போதவில்லை. ஏராளமான மக்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து இன்று கூடுதல் பேருந்துகள்இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கடைசி நாள்
இந்நிலையில் கடைசி நாளான இன்றும் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் தற்போது வரை 68,889 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்தி 80 பேர் பயணித்துள்ளனர். முதல் நாட்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதனால் பலரும் கடைசி நாளான இன்று சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருகை தருகின்றனர்.

பேருந்துகள்
ரயில் நிலையங்களில் கூட்டமாக இருப்பதாகவும், டிக்கெட் கிடைக்கவில்லை எனவே பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளோம்.
தற்போது கூட்டம் பெருமளவு இல்லை, ஆங்காங்கே பேருந்துகள் பிரிந்து அரசு ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா காலத்தில் பெருமளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அரசுக்கு நன்றி
கொரோனா அச்சமின்றி, கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க ஏதுவாக உள்ளது. எனவே சிரமம் இல்லாமல் பயணம் செய்யலாம் எனவும், எப்போதும் போல் கூட்ட நெரிசலில் சொந்த ஊர்களுக்கு பயணிக்க வேண்டும் என்ற அச்சமின்றி பயணிக்கிறோம் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தொலைப்பேசி எண்கள்
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகாா்களுக்கு 044 2474 9002, 1800 425 6151 ஆகிய எண்களையும் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications