“பேக்கரி டீலிங்” 5 வருடமாய் சிறுமியை சிதைத்த ட்ரம்ஸ் மாஸ்டர்! “அந்த” வீடியோ எடுத்து 7 லட்சம் அபேஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பேக்கரிக்கு வந்த சிறுமியிடம் பழகி ஐந்து வருடமாய் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாச வீடியோ எடுத்து 7 லட்சம் ரூபாய் நகை மற்றும் பணத்தை திருடிய ட்ரம்ஸ் மாஸ்டரை சென்னை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வதும், அதனை வீடியோ எடுத்தும் பணம் பறிக்கும் கும்பலின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் காமக் கொடுரர்களிடம் சிக்கி தங்கள் வாழ்வை தொலைக்கும் சிறுமிகலின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ட்ரம்ஸ் மாஸ்டர்

ட்ரம்ஸ் மாஸ்டர்

இந்நிலையில் ஐந்து வருடங்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோ எடுத்து ட்ரம்ஸ் மாஸ்டர் 7 லட்சம் ரூபாய் பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அசோக் நகர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் தங்கள் மகளை ஏமாற்றி ஞானப்பிரகாசம் என்ற இளைஞர் 7 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க சங்கிலியை பறித்து விட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

விசாரணையில் அதிர்ச்சி

விசாரணையில் அதிர்ச்சி

புகாரை அடுத்து ஞானப்பிரகாசத்தை காவல்துறையினர் காவல்நிலையம் அழைத்துவந்து, விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் அப்பகுதியில் டிரம்ஸ் இசை கலைஞராக பணியாற்றி வருகிறார். திருவிழா நாட்களில் மேடை கச்சேரிகளில் பங்கேற்கும் அவர் வேலை இல்லாத நாட்களில் அங்கிருக்கும் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார் , அப்போது எட்டாம் வகுப்பு படிக்கும்போதே பேக்கரிக்குச் சென்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வீடியோவை காட்டி மிரட்டல்

வீடியோவை காட்டி மிரட்டல்

கடந்த ஐந்து வருடங்களாக மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை அந்த மாணவிக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் வசதியானவர்கள் என்பதால் ஞானப்பிரகாசம் தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் மிரட்டி 2 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். மேலும் மாணவி அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலியையும் பெற்றுள்ளான். இந்நிலையில் கார் வாங்க ஆசைப்பட்டு அதற்கு 7 லட்சம் பணம் தேவைப்படுகிறது என மாணவியிடம் கேட்டபோது தன்னால் அவ்வளவு தொகையை தர முடியாது என கூறியுள்ளார்.

அதிரடி கைது

அதிரடி கைது

ஆத்திரமடைந்த டிரம்ஸ் மாஸ்டர் ஞானப்பிரகாசம் தான் செல்போனில் எடுத்து வைத்திருந்த வீடியோக்களை காட்டி தனக்கு பணம் தராவிட்டால் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி தனது தந்தை வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து கொடுத்துள்ளார். அந்த பணத்தில் கார் வாங்கி நகரின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்து உள்ளர். வீட்டில் இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது தான் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ள்ளார். இதனையடுத்து ஞானபிரகாசத்தை போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+