சென்னையில் அவ்வளவு மழை பெய்திருக்கு.. ஆனா பாருங்க முதல்வர் கண்ட்ரோல் ரூமுக்கு போகவே இல்ல!
சென்னை: சென்னையில் நேற்று மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. எண்ணூர், திருவொற்றியூர் தொடங்கி.. தாம்பரம் வரை மழையின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஆனால், நேற்று கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சரோ.. மற்ற அமைச்சர்களோ போகவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
வடகிழக்கு மழைக்கு டார்கெட்டே சென்னைதான். அதிலும், எல்-நினோ ஆண்டு என்றால் சொல்லவே தேவையில்லை. வட கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும். அப்படித்தான் நேற்றும் சென்னையில் மழை கொட்டியிருக்கிறது.

சென்னைியில் கொட்டிய மழை
நேற்று இரவு சென்னையில் மழை ஆரம்பத்தில் லேசாகத்தான் தொடங்கியது. ஆனால், போக போக வேகம் எடுத்தது. ஒரு கடத்தில் மழையின் தீவிரம் உச்சத்தை எட்டியது. பாரபட்சமே இல்லை! எண்ணூர் தொடங்கி, எர்ணாவூர், திருவொற்றியூர், டோல்கேட், தண்டையார்பேட்டை, ராயபுரம், ஐஓசி, கொருக்குப்பேட்டை, பேசின் பிரிட்ஜ், சென்ட்ரல், எழும்பூர், பாரிஸ் கார்னர், திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பச்சையப்பாஸ் காலேஜ், அமைந்தகரை, கோயம்பேடு இப்படி தாம்பரம், பூந்தமல்லி வரை மழை கொட்டி தீர்த்திருக்கிறது.
பாரிமுனையில் கொட்டிய மழை
அதிகபட்சமாக பாரிஸ் கார்னரில் 30 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. வழக்கமாக ரெட் அலர்ட் கொடுக்கிறார்கள் எனில், 20 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகும். ஆனால் 30 செ.மீ என்பது ரொம்பவே அதிகம். இப்படி பெய்த கனமழை காரணமாக சென்னையின் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்க தொடங்கியது. விடிந்தால் நிலைமை எப்படி இருக்கும்? என யாருக்கும் தெரியாது. இது போன்ற நேரங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று நிலவரத்தை விசாரிப்பார்கள்.
ஆனால், நேற்றிரவு முதலமைச்சர் கட்டுப்பாட்டு அறைக்கு போகவில்லை. அறையில் குறிப்பிட்ட அளவிலான ஊழியர்களும், அதிகாரிகளும்தான் பணியில் இருந்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்திருக்கின்றனர்.
திமுக ஆட்சியில்
இதற்கு முன்னர் திமுக ஆட்சிக்காலத்தில் இதேபோன்ற பெருமழை காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார்கள். முதலமைச்சரே கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்துவிட்டார் எனில், துறை சார்ந்த அதிகாரிகள் மின்னல் வேகத்தில் களத்தில் இறங்கி வேலை பார்ப்பார்கள். அப்படித்தான் வெள்ள பாதிப்பு கடந்த ஆட்சிக்காலத்தில் தடுக்கப்பட்டது.
வெள்ள தடுப்பு பணிகள்
இன்று கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் செல்லவில்லை. அதேபோல கடந்த ஆட்சியில், ரூ.4,000 கோடியில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள தடுப்பு பணிகளால்தான் இன்று காலை மழை நின்றவுடன் மொத்த மழைநீரும் வடிந்திருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
இனி வரும் காலங்களிலாவது முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்தால்தான் சென்னைக்கு வரும் பாதிப்பை தடுக்க முடியும் என்று திமுகவினர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
