சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன போய்கிட்டே இருக்கு? முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்த மிக நீளமான சென்னை மேம்பாலத்தின் சிறப்புகள்

Google Oneindia Tamil News

சென்னை: வாகன நெரிசல் மிகுந்த வேளச்சேரி - தாம்பரம் வழிதடத்தில் 2 கிலோ மீட்டர் தூர மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தென் சென்னையின் வளர்ச்சியடைந்த பகுதியாக வேளச்சேரி - தாம்பரம் இடையிலான பகுதி இருக்கிறது.

ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகளை கொண்ட இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

16 அடி உயரத்தில் அமையும்.. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை.. வரும் மே 28ம் தேதி திறப்பு!16 அடி உயரத்தில் அமையும்.. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை.. வரும் மே 28ம் தேதி திறப்பு!

 வாகன நெரிசல்

வாகன நெரிசல்

குறிப்பாக தாம்பரத்திலிருந்து வேளச்சேரி அந்த வழித்தடத்தில் வாகன நெரிசல் கடுமையாக இருந்தது வந்தது. புறநகரிலிருந்து சென்னை வரும் மக்கள் இந்த சாலை கடக்க 40 நிமிடங்களுக்கு மேலாகி வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இப்பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்

 ரூ.146.41 கோடி மதிப்பு

ரூ.146.41 கோடி மதிப்பு

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரூ.146.41 கோடி மதிப்பில் மேடவாக்கத்தில் மறைமலையடிகள் பாலம் - இரும்புலியூர் சந்திப்பில் இருக்கும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் பரங்கிமலை - மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

 2.03 கி.மீ. பாலம்

2.03 கி.மீ. பாலம்


2.03 கிலோ மீட்டர் தொலைவில் 11 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். குறிப்பாக மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதால் மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் எனக் கூறப்படுகிறது.

வாகன ஓட்டிகள் ஆறுதல்

வாகன ஓட்டிகள் ஆறுதல்

இந்த புதிய மேம்பாலத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் டிராபிக்கில் காத்திருக்காமல் சென்று வர முடியும். புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு உள்ளதால் சென்னை புறநகரிலிருந்து மத்திய சென்னை பகுதிக்கு நாள் தோறும் சென்று வரும் லட்சக்கணக்கான மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

தென் சென்னை வாசிகள் நிம்மதி

தென் சென்னை வாசிகள் நிம்மதி

குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, ஈசிஆர் சாலை, ஐ.டி. பார்க் சாலை, தரமணி, அடையாறு, மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இந்த மேம்பாலம் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும் என கூறப்படுகிறது.

English summary
Chennai's longest bridge opened in Medavakam - Key factors in 2.03 Kms long bridge: வாகன நெரிசல் மிகுந்த வேளச்சேரி - தாம்பரம் வழிதடத்தில் 2 கிலோ மீட்டர் தூர மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X