சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் ஏடிஎம் மிஷின்களுக்கே தெரியாமல் நூதன திருட்டு.. ஷாக்கான அதிகாரிகள்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை :சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் சுமார் ரூ.30 லட்சம் வரை நூதன முறையில் திருடிய டெல்லி கும்பல் ஹரியானாவுக்கு தப்பியோடிவிட்டது.

Recommended Video

    சென்னை ஏடிஎம்மில் சென்சாரை விரல்கள் மூலம் தடை செய்து பணத்தை எப்படி எடுத்தார்கள்.. சிசிடிவி காட்சி

    பணம் டெபாசிட் செய்யும் ஏடிஎம்களை குறிவைத்து இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது. ஏடிஎம்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாட்டை தங்களுககு சாதகமாக்கி கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளது.

    ஏடிஎம் மிஷின் அறையில் துளை போடவில்லை, ஏடிஎம்மை உடைக்கவில்லை ஆனால் ஏடிஎம்களில் இருந்த பணம் மயமாகி இருந்தது. அபாய மணியும் அடிக்காத அளவிற்கு நூதனமாக மெஷினை நம்ப வைத்து பணத்தை திருடி உள்ளது கொள்ளை கும்பல்.

    டெபாசிட் பணம்

    டெபாசிட் பணம்

    சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் செயல்படுகிறது. இங்கு, வங்கி மேனேஜர் முரளிபாபு 2 தினங்களுக்கு முன்பு சென்று கணக்கை சரிபார்த்திருக்கிறார். அப்போது, டெபாசிட் மெஷினில் இருந்து ரூ1.50 லட்சம் கணக்கில் வராமல் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    ஏடிஎம் கார்டு

    ஏடிஎம் கார்டு

    உடனே, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் கடந்த 17ம் தேதி மாலை ஏடிஎம் மையத்திற்கு வந்த 2 மர்ம நபர்களில் ஒருவன் ஹெல்மெட் அணிந்திருந்திருக்கிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் வீதம் 15 முறை மொத்தம் ரூ.1.50 லட்சத்தை டெபாசிட் செய்யும் மெஷினில் இருந்து எடுத்து சென்றது பதிவாகி இருந்தது.

    20 வினாடி

    20 வினாடி

    எப்படி இது சாத்தியம் என்பது குறித்து வங்க அதிகாரிகள் கூறும் போது, நூதனமான முறையில் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றதை ஒப்புக்கொண்டனர் அதாவது பணம் செலுத்தும் மெஷினில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்கும் போது 20 வினாடிகளில் பணத்தை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் உள்ளே சென்றுவிடும். அதன்பின்னர் வாடிக்கையாளர்களின் கணக்கிலேயே அந்த பணத்தை மிசின் வரவு வைத்துவிடும்.

    குறைபாடு

    குறைபாடு

    ஆனால் 20 வினாடி முடிந்ததும் பணம் உள்ளே செல்லும் போது, சரியாக சென்சாரை கைகளால் மறைத்து ஷட்டரை அழுத்தி பிடித்து பணத்தை உள்ளே செல்ல விடாமல் எடுத்தால் மிஷினுக்கு பணம் எடுத்து தெரியாது பணம் உள்ளே சென்றுவிட்டதாக மெஷின் நினைத்துக்கொள்ளும்.இந்த தொழில்நுட்ப குறைபாட்டை பயன்படுத்திதான் நூதனமான முறையில் பணத்தை திருடியதும் தெரியவந்தது என்றார்கள்.

    போலீசார் வழக்கு

    போலீசார் வழக்கு

    சென்னையில் ராமாபுரம் மட்டுமின்றி விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் அதே ஆசாமிகள் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கும்பல் ஒட்டம்

    கும்பல் ஒட்டம்

    இதனிடையே அந்த கும்பல் டெல்லியில் இருந்து கடந்த வாரம் சென்னை வந்துள்ளது. வாடகைக்கு பைக்கை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் மெஷினாக குறிவைத்து பணத்தை திருடி இருக்கிறத. 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டெல்லி கும்பல் இப்போது ஹரியானாவிற்கு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. இதனிடையே நூதன மோசடியை தடுக்க சென்னையில் உள்ள எஸ்பிஐ டெபாசிட் மெஷினில் பணம் எடுக்க தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    English summary
    The Delhi gang has fled to Haryana after stealing up to Rs 30 lakh from SBI ATMs in Chennai. SBI ATM Deposit Machines robbery by new techinics in chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X