Chennai SIR: 3ல் ஒரு பங்கு காலி.. சென்னையில் எந்த காரணத்திற்காக அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் தெரியுமா?
பீகாரில் கடந்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கு முன்பு அங்கு மாநிலம் முழுக்க சார் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. அதில் பல போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள், உயிரிழந்தோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பீகாரை தொடர்ந்து பல மாநிலங்களிலும் சார் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
அதன்படி தமிழ்நாட்டில் சார் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சார் பணிகளின் தேதி தமிழ்நாட்டில் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. கடந்த 14 வரை வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் சென்னை மாவட்டத்தில் தான் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு சென்னையில் 40.04 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், சார் பணிகளில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 35% நீக்கப்பட்டுள்ளனர்.
மூன்றில் ஒரு பகுதியினர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 14,25,018 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக 12,22,164 பேர் இடம் மாறியவர்கள் என்பதற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து உயிரிழந்ததாகச் சொல்லி 1,56,555 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேபோல தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என்று 27,328 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இரட்டை பதிவு என்ற முறையில் 18,772 பேரும் மற்ற காரணங்கள் என 199 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
-
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு












Click it and Unblock the Notifications