சென்னை பயணிகளின் கவனத்துக்கு.. இன்று 19 புறநகர் ரயில் சேவைகள் ரத்து.. இந்த லிஸ்ட்டை பாருங்க
சென்னை: சென்னையில் இன்று பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக 19 புறநகர் ரயில் சேவைகள் இன்றும், நாளை மறுநாள் (மே 17) என 2 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை சென்ட்ரல் - குதூர் பிரிவில் கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்துக்கு ஏற்ப இன்ஜினியரிங் பணிகள் இன்றும் (மே 15) மற்றும் மே 17 (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்கண்ட மின்சார ரயில்கள், மெமு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

அதன்படி காலை 5.40 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - சூலூர் பேட்டை மெமு ரயில் (வண்டி எண் 66029), காலை 8.10 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை - நெல்லூர் மெமு ரயில் (66035), காலை 10.15 ணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - சூலூர் பேட்டை ரயில்(42413), காலை 10.30 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிபூண்டி ரயில் (42015), காலை 10.20 மணிக்கு புறப்படும் நெல்லூர் - சூலூர் பேட்டை மெமு பயணிகள் ரயில் (66036), நண்பகல் 11.45 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிபூண்டி ரயில் (42015) ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் மதியம் 12.10 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - சூலூர் பேட்டை ரயில் (42415), மாலை 4.25 மணிக்கு புறப்படும் ஆவடி - மூர்மார்க்கெட் காம்ப்ளஸ் ரயில் (66000), மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - கும்மிடிபூண்டி ரயில் (42603), மதியம் 1.40 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - கும்மிடிபூண்டி ரயில் (42017), மதியம் 2.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி ரயில் (42605) ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் மதியம் 1 மணிக்கு புறப்படும் கும்மிடிபூண்டி - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் (42022), மதியம் 12.35 மணிக்கு புறப்படும் சூலூர் பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மெமு ரயில் (66030), மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சூலூர் பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் (42414), மதியம் 2.30 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை ரயில் (42024) ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் (42026), பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் (42028), பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் (4241), மாலை 4.30 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை ரயில் (42606) ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications