சென்னையில் முதல் முறையாக.. ஏசி மின்சார பேருந்து சேவை.. நாளை தொடங்கி வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் முதல் முறையாக ஏசி மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. 233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 55 மின்சார ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்து சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து நாளை முதல் மின்சார பேருந்துகள் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

முதல் முறையாக ஏசி வசதி கொண்ட மின்சார பேருந்து சேவைகள் நாளை முதல் சென்னையில் இயக்கப்பட உள்ளன. சென்னை வியாசர்பாடியை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நாளை முதல் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 ஏசி மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
135 மின்சார பேருந்துகளில் 55 ஏசி மின்சார பேருந்துகளும், 80 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதற்கான பெரும்பாக்கம் பணிமனை பணியாளர்களுக்கான ஓய்வறை, பராமரிப்புக் கூடம், அலுவலக நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார பேருந்துகளுக்காக வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் இருந்து மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி முதல் வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகள் 11 வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து நாளை முதல் 55 மின்சார ஏசி பேருந்துகள், 80 மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
49.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரும்பாக்கம் மின்சார பேருந்துகள் பணிமனை மற்றும் இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 55 மின்சார ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்து சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
உங்களுக்கு எதிராதான் பேசி இருக்காரு! விஜயுடன் துரை வைகோ பேசியது என்ன? நைசாக விசாரித்த உதயநிதி -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications