பைக் சாகசம் நோ சான்ஸ்! 8 மணிக்கு மேல் மெரீனா லாக்! விபத்தில்லா புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள்!
சென்னை : "விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்" காரணமாக முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் சென்னை வந்துள்ள நிலையில், மெரினா கடற்கரை, அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று இரவு 8 மணிக்கு மேல் மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2022 இன்று இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் வகையில் கீழ்க்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா அச்சுறுத்தலும் இருப்பதால் தமிழகம் முழுவதும் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்தில்லா புத்தாண்டு
இந்நிலையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை காவல்துறை சார்பில் பல்வேறு வழிகாட்டுதல்களும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 31.12.2022 இன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 10000 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

கடும் கட்டுப்பாடுகள்
சென்னை முழுவதும் வாகன சோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தி யாரும் வாகனம் ஓட்டக்கூடாது மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகளில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சியின் போது அதன் ஏற்பாட்டாளர்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் காவல் துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்

நடவடிக்கை
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் . இந்தப் புத்தாண்டை அசம்பாவிதம் இல்லாத, விபத்து இல்லாத புத்தாண்டாக கொண்டாட மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். "விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்" காரணமாக முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் சென்னை வந்துள்ள நிலையில், மெரினா கடற்கரை, அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று இரவு 8 மணிக்கு மேல் மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு
அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் பைக் ரேசை தடுக்க சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 மணிக்கு மேல் இரு இருசக்கர வாகனங்களில் ஒன்றாக சென்றாலே நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாகசம் நோ
மீறியும் சாகசம் செய்பவர்களை கண்காணிக்க இரவில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை சாலையில் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. எலியடஸ் கடற்கரையிலும் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் நேரக்கட்டுப்பாட்டுக்கு முன்னதாக பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் காவல்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications