சென்னையில் கொசுவை விரட்ட வீட்டில் செய்த பகீர்.. உயிரை பறித்தது.. குடும்பமே கவலைக்கிடம்
சென்னை: சென்னை பல்லாவரத்தில் கொசுவை விரட்ட புகை மூட்டம் போட்டு தூங்கியதால் ஒரு குடும்பமே மூச்சுதிணறல் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொசுவை விரட்ட போட்ட புகை மூட்டம் உயிரை பறித்து, மற்றவர்களையும் உயிருக்கு போட வைத்த சம்பவம் சென்னை பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகை மூட்டம்
சென்னை பல்லாவரம் அடுத்த, பம்மல், திருவள்ளுவர் தெரு, பொன்னி நகரில் ஒரு வீட்டில் நான்கு பேர் இரவு தூங்கியுள்ளனர். இன்று காலை வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து வீட்டில் இருந்து புகை வெளியே வரத்துவங்கியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குரோம்பேட்டை
தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் உள்ளே சென்று பார்த்த போது நான்கு பேர் வீட்டில் மயக்க நிலையில் இருந்துள்ளனர். நான்கு பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மூன்று பேர் கவலைக்கிடம்
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பலட்சுமி(55) என்ற பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மீதமுள்ள சொக்கலிங்கம்(61), விஷால்(11), மல்லிகா(38), மூவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைகாக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தகவல்
வீட்டில் கொசு தொல்லை இருப்பதால் புகை மூட்டம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அதே போல் நேற்றிரவும் புகை போட்டுள்ளனர். இதனால் உருவான புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
3.2 கோடி கொசுக்களை ஊருக்குள் விடப் போகும் கூகுள்! பின்னணியில் மெகா ஸ்கெட்ச்! அமெரிக்கா அனுமதிக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications