சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு பங்களாவில் குடியேற போகும் ஸ்டாலின்.. யார் வசிக்கும் இல்லம் தெரியுமா? பரபர தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சித்தரஞ்சன் சாலை பங்களாவிலிருந்து அரசு பங்களாவுக்கு குடியெற முதல்வர் முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபால் குடியிருந்து வரும் குறிஞ்சி இல்லத்தில் குடியேற திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக அந்தப் பங்களாவைக் காலிசெய்து கொடுக்குமாறு அரசு தரப்பிலிருந்து தனபாலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

Recommended Video

    அரசு பங்களாவில் குடியேற போகும் Stalin.. யார் வசிக்கும் இல்லம் தெரியுமா ?

    சென்னை ஆர்.ஏ.புரம் பசுமைவழிச் சாலையில்தமிழக அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள், நீதிபதிகள் குடியிருப்பு ஆகியவை உள்ளன. இந்த பகுதியே மிகமிக அதிகப்படியான மரங்களால் சூழப்பட்டு மிகவும் பசுமையாக காணப்படும். இங்குள்ள அரசு பங்களாக்களில்தான் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வமும் வசித்து வந்தனர். இதேபோல் சபாநாயகர் மற்றும மற்ற அமைச்சர்களும் வசித்து வந்தார்கள்.

    அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில், ஒருங்கிணைப்பாளர் மனு அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில், ஒருங்கிணைப்பாளர் மனு

    ஆனால் கருணாநிதி , ஜெயலலிதா இருவரும் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில், அவரவர்களின் சொந்த வீட்டில் இருந்தபடியே ஆட்சியை நடத்தி வந்தார்கள். கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் இருந்தும், ஜெயலலிதா போயஸ் தோட்ட பங்களாவிலும் குடியிருந்தபடி ஆட்சி செய்து வந்தனர். அரசு பங்களாக்களில் இவர்கள் குடியேறவில்லை. அவர்களின் பங்களாக்களே முதல்வரின் கேம்ப் அலுவலகமாகவும் அந்த காலத்தில் இயங்கி வந்தன.

    அரசு பங்களா

    அரசு பங்களா

    இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது சித்தரஞ்சன் சாலை பங்களாவில் இருந்து ஆர்.ஏ.புரத்தில் உள்ள அரசு பங்களாவுக்கு இடமாறுவதற்கு ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    நீண்ட ஆலோசனை

    நீண்ட ஆலோசனை

    முதல்வர் மு.க. ஸ்டாலின். அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவது, ஐஏஏஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது. காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்துவது என பலமணி நேரம் தனது சித்தரஞ்சன் இல்லத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்து அரசு பங்களாவில் குடியேறி இத்தகைய ஆலோசனைகளை நடத்த விரும்புகிறாராம். .

    விரைவில் மாறுகிறார்

    விரைவில் மாறுகிறார்

    அரசின் நிர்வாகத்தைக் கவனிக்கவும், அமைச்சர்களை அவசர ஆலோசனைகளுக்காக அழைத்து விவாதிக்கவும் அரசு பங்களாவே சரியானதாக இருக்கும் என்று ஸ்டாலின் கருதுகிறாராம்., அதனால் விரைவியே அரசு பங்களாவுக்கு மாறவாய்ப்பு உள்ளதாம்.

    குறிஞ்சி இல்லம்

    குறிஞ்சி இல்லம்

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலமான 2006 - 2011 ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் ஸடாலின் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், அதன்பின்னர் துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்தார். அப்போது பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு பங்களாவான குறிஞ்சி இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அதே குறிஞ்சி இல்லத்தில் தங்கி அரசு பணிகளைக் கவனிக்கத் ஸ்டாலின் விரும்புவதாக தலைமை செயலக வட்டாரங்கள் சொல்கின்றன.

    அதிமுக ஆட்சி

    அதிமுக ஆட்சி

    அதிமுக ஆட்சியில், இந்தக் குறிஞ்சி இல்லம், சபாநாயகராக இருந்த தனபாலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகால அவர் தான் அங்கு வசித்து வருகிறார். அந்தப் பங்களாவைக் காலிசெய்து கொடுக்குமாறு அரசு தரப்பிலிருந்து தனபாலுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாம். பங்களா காலியானதும் அதனைப் புனரமைக்கும் பணிகளைப் பொதுப்பணித்துறையினர் கவனிக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பு கூறுகிறது. குறிஞ்சி இல்லம் புதுப்பிக்கப்பட்ட பிறகு ஸ்டாலின் குடியேறுவாராம்.

    English summary
    It has been reported that Chief Minister MK Stalin has decided to move from the Chittaranjan Road bungalow in Chennai to the government bungalow. Former Speaker Dhanapal is now stay in Kurinji house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X