சீனாவுக்கு வாங்களேன்! இந்திய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர்
டெல்லி: இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை சந்தித்து தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லடாக் எல்லைப்பகுதியில் இந்திய படையினருக்கும் சீனா ராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ இன்று டெல்லி வந்துள்ளார்.
சீன அரசு மற்றும் இந்திய அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இன்றி இந்தியா வந்த வாங் இ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரையும் சந்திக்க இருக்கிறார்.

அஜித் தோவலுடன் சந்திப்பு
இந்திய பாதுகாப்புத்துறை, எல்லை பாதுகாப்பு விவகாரங்களின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து அவர் பேசினார். தலைநகர் டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சவுத் பிளாக்கில் நடைபெற்ற சந்திப்பில் இருநாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

படைகளை வாபஸ் பெற வலியுறுத்தல்
அப்போது எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் சீன படைகளை வாபஸ் பெற வேண்டும் என அஜித் தோவால் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ-யிடம் வலியுறுத்தி இருக்கிறார். இருநாட்டு நல்லுறவு இயல்பு நிலைக்கு திரும்ப இதை அவசியம் செய்ய வேண்டும் என அவர் கூறி இருக்கிறார்.

சீனாவுக்கு அழைத்த வாங் இ
இந்த சந்திப்பின்போது இருநாட்டு எல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை சீனாவுக்கு வருமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ அழைப்பு விடுத்தார். இதற்கு பதிலளித்த தோவால், எல்லை பிரச்சனைகள் தீர்ந்தவுடன் சீனாவுக்கு வருவதாக கூறினார்.

பாகிஸ்தான் மாநாட்டில் பேசிய வாங் இ
நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்புடன் சீனா இணைந்து செயல்படுவது குறித்த 2 வது அறிக்கை வெளியானது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய வாங் இ, காஷ்மீர் விவகாரத்தில் ஏராளமான இஸ்லாமிய நண்பர்களின் அழைப்புகளை கேட்டிருக்கிறோம்." எனக் கூறினார்.

வாங் இ கருத்துக்கு இந்தியா கண்டனம்
காஷ்மீர் தொடர்பான அவரது கருத்துக்களை இந்தியா உடனடியாக நிராகரித்ததுடன் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடக்கூடாது என்று கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அரிந்தம் பாக்சி, "நாடுகளும் அரசுகளும் இதுபோன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தங்கள் நாட்டிற்கு ஏற்படும் அவப்பெயரை கருத்தில் கொள்ள வேண்டும்." என்றார்.

திடீரென இந்தியா வந்த வாங் இ
இந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்திருப்பது சர்வதேச கவனத்தை பெற்று உள்ளது. நேற்றைய தினம் கல்லூரி விழா ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், "சீனாவை பொறுத்தவரை 2020-ல் இருநாட்டு ராணுவ மோதலுக்கு பிறகு இந்தியா - சீனா இடையிலான ராஜ தந்திர உறவுகள் அவர்களின் ராணுவ நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என கருதுகிறார்கள்." என்றார்.

பிரிக்ஸ் மாநாட்டு
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா வந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ, இருநாட்டு எல்லைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றார். ஆனால், அடுத்த 5 மாதங்களில் லடாக்கில் மோதல் ஏற்பட்டது. வாங் இ-யின் தற்போதைய இந்திய பயணம் அடுத்த பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டிற்கு அடித்தளம் இட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
வெளிச்சம் தெரிகிறது.. இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை.. மீண்டும் Big Boss ஆக மாறும் பாகிஸ்தான்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications