சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. பதக்கங்களை வழங்குவது யார்.. அமைச்சர் சொன்ன சீக்ரெட்!

Google Oneindia Tamil News

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிறைவு விழா நாளை மறுநாள் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இனிவரும் ஒவ்வொரு போட்டியும் பதக்க வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால், வீரர், வீராங்கனைகள் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான தேவையான வசதிகளை தமிழக அரசு முன்னின்று செய்து வருகிறது.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தாலிபான்கள் கொடி.. பரபரத்த மகாபலிபுரம்.. நடந்தது என்ன? சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தாலிபான்கள் கொடி.. பரபரத்த மகாபலிபுரம்.. நடந்தது என்ன?

நிறைவு விழா

நிறைவு விழா

அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிறைவு விழாவிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொடக்க விழாவைப் போல் நிறைவு விழாவையும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பதக்கம் வழங்கப் போவது யார் என்று கேள்வி எழுந்தது.

கருத்தரங்கு

கருத்தரங்கு

இந்த நிலையில் சென்னை தரமணியில் உள்ள எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் மலை மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பில் நிலையான வளர்ச்சி குறித்த விவாத கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.

அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், மலைகளை பாதுகாப்பது, கடற்கரைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்துகொண்டு பேசினர். தமிழ்நாட்டில் பனை மரங்களை வெட்டக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் அதிக அளவு ஆக்சிஜன் தரக்கூடிய மூங்கில் மரங்களை அனைத்து பகுதிகளிலும் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நாளை மறுநாள் நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற இருக்கிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்குவார் என்று தெரிவித்தார்.

English summary
Minister Meyyanathan has said that the closing ceremony of the Chess Olympiad will be held on a grand scale the day after tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X