டிவியில் செய்திகள் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின்! வைரலாகும் வீடியோக்கள்
சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Recommended Video
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மற்றும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில், முக ஸ்டாலின் எப்போதுமே தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
உடற்பயிற்சியில் முக்கியமான ஒரு அம்சம் சைக்கிள் ஓட்டுவது. ஸ்டாலினுக்கும் சைக்கிளிங் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும் . அதற்கான பிரத்யேக ஆடைகளை அணிந்து கொண்டு தலையில் ஹெல்மெட் உடன் அவ்வப்போது ஸ்டாலின் சைக்கிளில் செல்வது வழக்கம். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

வீட்டில் உடற்பயிற்சி கூடம்
உடல் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஸ்டாலின், அதற்கு வசதியாக, தனது வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் ஒன்றை அமைத்துள்ளார். அனைத்து வகை நவீன உபகரணங்களுடன் அந்த உடற்பயிற்சி கூடம் உள்ளது. உள்ளேயே தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அறையில் உடற்பயிற்சி செய்து கொண்டே நாட்டு நடப்புகளை நொடிக்கு நொடி தெரிந்துகொள்வது ஸ்டாலின் வாடிக்கையாக இருக்கிறது.

செய்தி சேனல் ஓடுகிறது
முதலமைச்சர் என்ற பதவிக்கு வந்தபிறகு கடமைகளும் பொறுப்புகளும் அதிகரித்துவிட்ட நிலையில், எப்போது உடற்பயிற்சி கூடம் வந்தாலும் தொலைக்காட்சியில் ஓடும் செய்திகளை காதில் வாங்கிக்கொண்டே பயிற்சிகளை மேற்கொள்வது அவரது வழக்கமாக மாறிவிட்டது. இப்படித்தான் சமீபத்தில் அவர் உடற்பயிற்சி செய்த வீடியோக்கள் வரிசையாக தற்போது வெளியாகியுள்ளன. அந்த வீடியோ காட்சியில் உடற்பயிற்சி கூடத்துக்குள் உள்ள தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

மூன்று வகை வீடியோக்கள்
இரு கைகளிலும் எடையுள்ள இரும்பு வட்டுகளை தூக்கிக்கொண்டு கால்கள் வளையாமல் உடலின் மேல்பகுதி மட்டும் குனிந்து நிமிரும் வகையிலான ஒரு உடற்பயிற்சியை செய்யக்கூடியது காட்சியை ஒரு வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இன்னொரு வீடியோவில் ஸ்டாலின் ஒரு இரும்புக் கம்பியை மேலே இருந்து கீழே இறக்கி மீண்டும் மேலே தூக்கி உடற்பயிற்சி செய்கிறார். இரும்புக்கம்பியின் மறுப் பக்கத்தில் இரும்பிலான எடை கொண்ட பொருள் தொங்க விடப்பட்டு இருக்கிறது. இது தோள்பட்டைக்கு வலு தரக்கூடிய ஒரு உடற்பயிற்சியாகும். முட்டி கால்கள் வளையாமல் திடமாக நின்றபடி கைகளை மட்டும் மேலே மேலே உயர்த்தி இந்த உடற்பயிற்சியை அவர் செய்கிறார். இதன் மூலம் அந்த உடற்பயிற்சியில் அவர் நீண்ட அனுபவம் கொண்டவராக இருக்க முடியும் என்று தெரிகிறது. இன்னொரு உடற்பயிற்சியின்போது தனது மார்பு பகுதி வரை இரும்பு கம்பியை இழுத்து மீண்டும் முன் புறம் தள்ளுகிறார் ஸ்டாலின். அப்போது ஒரு காலை அவர் முன்னால் வைத்திருக்கிறார், இன்னொரு காலைப் பின்னால் வைத்திருக்கிறார். இது மார்பு பகுதியில் தசைகளை விரிவுபடுத்தி நிமிர்ந்த ஒரு நெஞ்சு தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான உடற்பயிற்சி என்கிறார்கள்.

இளைஞர்களுக்கு உத்வேகம்
இந்த மூன்று வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன . உடற்பயிற்சி செய்யும்போது ஸ்டாலின் ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ் லெஸ் டீ சட்டை வகையிலான ஆடைகளை அணிந்து இருக்கிறார். கால்களில் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. ஒரு தொழில்முறை உடற்பயிற்சி செய்பவர் எவ்வாறு தயாராகி இருப்பாரோ அந்த வகையில் ஸ்டாலினும் தயாராக வந்து இதை செய்துள்ளார் என்பதை வீடியோ பார்ப்பவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இளம் தலைமுறையினருக்கு உடற்பயிற்சி மீது நாட்டம் ஏற்படுவதற்கு இது போன்ற முக்கிய பிரமுகர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் உத்வேகம் தரும். அந்த வகையில் கண்டிப்பாக இந்த வீடியோக்களை வெளியிட்டவர்களுக்கு நன்றி சொல்லத்தான் செய்ய வேண்டும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications