குணமடைந்து வீடு திரும்பிய பாரதிராஜா..நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: உடல் நலமடைந்து வீடு திரும்பியுள்ள பாரதிராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மருத்துவமனையில் பாரதிராஜா சிகிச்சை பெற்றபோது தொலைபேசியில் முதல்வர் நலம் விசாரித்திருந்தார். இன்று நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று பாரதிராஜாவிடம் நலம் விசாரித்துள்ளார்.
பழம்பெரும் இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா தன்னுடைய 81 வயதில் கூட மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கிறார். தற்போதைய இளம் நடிகர்களின் படங்களில் வயதான தோற்றத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் பாரதிராஜா.
சமீபத்தில் மதுரைக்கு சென்ற இவர், அங்கிருந்து சென்னை திரும்ப விமான நிலையம் வந்த போது, விமான நிலையத்திலேயே மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக சிகிச்சை கொடுக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பின் மதுரையில் தங்கி ஒரு நாள் ஓய்வு எடுத்த பின்னர், மறுநாளே சென்னைக்கு திரும்பினார். தன்னுடைய வீட்டில் ஓய்வில் இருந்த இவருக்கு மீண்டும் திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டது.

பாரதிராஜாவிற்கு உடல் நலக்கோளாறு
கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜாவுக்கு, அஜீரணக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது நிலை உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் இயக்குனர் பாரதிராஜா இரண்டே நாட்களில் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதி
சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களிலேயே அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம், யாரும் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என அவரே அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். உடல் நலம் சற்று தேறிய பின்னர் இளையராஜா, வைரமுத்து, ராதிகா உள்ளிட்டோர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். முதல்வர் மு.க ஸ்டாலின் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.

டிஸ்சார்ஜ்
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா, பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவமனை அறிக்கையில், 81 வயதான பாரதிராஜா கடந்த 26/08/2022 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆல்டர்ட் சென்சோரியம் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலை தேறியதன் காரணமாக டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் பேட்டி
பாரதிராஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் மனோஜ், " ஏ.சி சண்முகம், வைரமுத்து மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி. இக்கட்டான சூழ்நிலையில் அப்பாவை கொண்டுவந்தோம். நல்லமுறையில் மருத்துவர்கள் எங்களுக்கு திருப்பிக்கொடுத்துவிட்டார்கள். எங்களுக்கு பணப்பிரச்னை ஏதும் இல்லை. எங்களது பணத்தில்தான் அவரை பார்த்துக்கொண்டோம் என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாரதிராஜா நீலங்கரையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது வீட்டிற்கு இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். ஏற்கனவே மருத்துவமனையில் இருந்த போது தொலைபேசியில் பேசி நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications