நிலுவையில் மசோதாக்கள்.. ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, கிண்டியில் ஆளுநர் மாளிகை ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதல் 2ஆம் தேதி நேரில் சந்தித்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

குறிப்பாக தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022, உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Recommended Video
இன்றைய தினம் ஆளுநரை நேரில் சந்திக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின், நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications