Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமரி அனந்தன் மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு பேரிழப்பு! முதலமைச்சர் இரங்கல்! உடலுக்கு அரசு மரியாதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் பேரியக்கத்துக்காக ஒப்படைத்து கொண்ட குமரி அனந்தனின் மறைவு தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

"இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து துயருற்றேன் பெருந்தலைவர் காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட குமரி அனந்தன் மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்" என்று கூறியுள்ளார்.

Kumari Ananthan MK Stalin Tamil Nadu

அதேபோல அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் மறைவுற்ற செய்தியை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வேதனையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளதோடு, மறைந்த திரு. குமரி அளந்தன் அவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய அப்பா குமரி அனந்தன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 'தகைசால் தமிழர்' கடந்த ஆண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்காக வாழ்ந்திட்ட அய்பா குமரி அளந்தன் அவர்களின் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள மகள் தமிழிசை சௌந்தரராஜன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு விருகம்பாக்கம் மயானத்தில் வைத்து இறுதி சடங்கு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+