Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரதிராஜாவுக்கு என்னாச்சு..? பாரதிராஜா மனைவியிடம் போனில் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து, அவரது மனைவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் விசாரித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது இவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து, அவரது மனைவியிடம் போனில் விசாரித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜாவின் உடல்நலனில் அக்கறை கொண்டு முதல்வர் ஸ்டாலின், போனில் விசாரித்தது திரையுலகினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பாரதிராஜா உடல்நலக்குறைவு

பாரதிராஜா உடல்நலக்குறைவு

இயக்குநர் பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என தகவல் வெளியானது. பின்பு உடல்நலம் விரைந்து சீரடையாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாரதிராஜா

பாரதிராஜா

இந்நிலையில் நேற்று பாரதிராஜா தனது உடல்நலம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் சந்திப்போம்

விரைவில் சந்திப்போம்

விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்." எனத் தெரிவித்திருந்தார்.

 விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நலக்குறைவு குறித்து தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். பாரதிராஜாவின் மனைவியிடம் தொலைபேசியில் பேசி பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிகழ்வு பாரதிராஜாவின் குடும்பத்தினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+