Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த டார்கெட் 6 அமைச்சர்கள்.. திட்டம் போடும் டெல்லி.. புதிய டீமை இறக்கும் ஸ்டாலின்.. திக் திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை; பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நிலையில்..முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில நடவடிக்கைகளை செய்ய முடிவு செய்துள்ளாராம்.

பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று கூறி.. அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார்.

CM Stalin to take a new legal team as 6 More ministers will be targetted next in DMK

அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வைக்கும் தகுதியை இழந்துவிட்டார்.

அமைச்சரவை மாற்றம்: அதோடு 30 நாட்கள் அவகாசம் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதுவரை உயர் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அடுத்த டார்கெட்: திமுகவில் அடுத்த டார்கெட் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டு உள்ளன.

அதன்படி, பாஜகவை எப்படி வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அடித்து ஆடலாம். டிபன்ஸ் ஆடலாம். கொஞ்ச நாள் அமைதியாக இருக்கலாம். பாஜகவிற்கு அப்படி பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. இத்தனை காலம் ஸ்டாலின் அமைதியாக இருந்தார். இனி ஸ்டாலின் திருப்பி அடிப்பார். பொன்முடிக்கு அடுத்து ஏ. வ வேலு குறி வைக்கப்பட உள்ளது. அவரிடம் மீண்டும் ரெய்டு நடத்த வாய்ப்பு உள்ளது. அது திமுகவிற்கு மேலும் பிரஷரை கொடுக்கும். திமுக மீது திட்டமிட்ட தாக்குதலை டெல்லி நடத்துகிறது .

முறையாக திட்டமிட்டு.. திமுகவிற்கு டெல்லி பிரஷர் கொடுக்கிறது. அதில் இருந்து எப்படி தப்பிப்பது, பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். அதில் ஒரு ஐடியாதான் அமைச்சரவையை மாற்றுவது. தற்காலிமாக அமைச்சரவையை மாற்றலாம். 2024ல் கண்டிப்பாக ஆட்சி மாறும். அதுவரை இப்படிஸ் செய்யலாம் என்று ஸ்டாலின் இருக்கிறார்.

ஸ்டாலின் பிளான்: இந்த விவகாரத்தில் ஸ்டாலினுக்கு சென்ற அறிவுரையில் .. திமுக என்றால் லீகல் விங் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அதே லீகல் மிகவும் வலிமை இல்லாமல் இருக்கிறது. முக்கியமாக பொன்முடி வழக்கில் மிக முக்கியமான பாயிண்ட் ஒன்றையே அவர்கள் வழக்கு முடிந்த அன்று.. தீர்ப்பு வழங்கும் போது தான் கண்டுபிடித்தனர்.

இது சரியில்லை. இனி அமைச்சர்களை காப்பற்ற வேண்டும் என்றால் அரசு வழக்கறிஞர்களை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்தி விரைவில் புதிய வழக்கறிஞர்கள் டீமை இறக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏ வ வேலு விசாரணை: அடுத்து ஏ வ வேலு விசாரணைக்கு உள்ளவார் . திமுகவில் அவர்தான் நம்பர் 2. அவரை டெல்லி குறி வைக்கிறது. அதிமுக காலத்திலேயே டாஸ்மாக் முறைகேடு தொடங்கி மணல் முறைகேடு வரை எல்லாம் நடந்தது. அதிமுக காலத்தில் நடந்தது தற்போதும் அது தொடருகிறது. தற்போது இது திமுக என்பதால் அமலாக்கத்துறை உள்ளே வந்துள்ளது. அமலாக்கத்துறைக்கு பவர் உள்ளது என்பதால் அவர்கள் இதை கணக்கிடுகிறார்கள்.

6 பேர் சிக்கல்: கே. என் நேரு மீது விசாரணை அடுத்து நடக்கலாம். கேகேஎஸ்எஸ்ஆர் மீதும் விசாரணை நடத்தப்படலாம் . ஐ பெரியசாமி ஆகியோர் மீதும் விசாரணை நடக்கலாம். பொன்முடி, துரைமுருகன், கே. என் நேரு, ஐ பெரியசாமி, ஏவவேலு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகிய 6 பேர் சிக்கலில் உள்ளனர். இவர்கள் 6 பேர் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்குழு இறங்கலாம், என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+