கிரேனில் தொங்கியதை பார்த்து அதிர்ந்த அமைச்சர்.. "என்ன இதெல்லாம்".. செம கண்டிப்பு.. திருச்சி பரபரப்பு
திமுகவில் அமைச்சர்கள் எளிமையை கடைப்பிடித்து வருகின்றனர்
சென்னை: கையில் தூக்க முடியாத அளவுக்கு ஒரு மெகா சைஸ் மாலையை அணிவிக்க திமுகவினர் தயாரித்துள்ளனர்.. இதைபார்த்து திமுக அமைச்சர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த முறை ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக அரசு எளிமையை கடைப்பிடித்து வருகிறது.. அமைச்சரவையில் பதவியேற்றது முதலே இது நடைமுறையில் உள்ளது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற விழா, எந்தவித ஆரவாரமின்றி ஏற்பாடு செய்யப்பட்டதே அதற்கு சாட்சி.. மிக இக்கட்டான நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பை உணர்ந்து பெரிய விழாவை தவிர்த்திருந்தார்.

உதயநிதி
இதற்கு பிறகும்கூட, உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக அமைச்சர்கள் ஆட்டோவில் பயணம் செய்து சேப்பாக்கம் தொகுதியை ஆய்வு செய்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.. அங்குள்ள சில பகுதிகள் கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சந்துகள் நிறைய உள்ளதால், இந்த சிரமத்தினால்தான், காரை தவிர்த்துவிட்டு, ஒரு ஆட்டோவை வரவழைத்து உதயநிதி அதில் சென்றதாகவும் கூறப்பட்டது.

ஆட்டோ
இவர் மட்டுமல்ல, இவருடன் வழக்கமான வரும் அதிகாரிகளையும் ஆட்டோ பிடித்து கொண்டே தொகுதிக்கு வந்துவிடுமாறும் போனை போட்டு சொல்லி இருந்தார் உதயநிதி ஸ்டாலின்.. உதயநிதியுடன் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் உட்பட எல்லாரும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.. இதை பார்த்ததுமே அந்த தொகுதி மக்கள் வாயடைத்து இப்படி ஒரு எளிய எம்எல்ஏவா? என்று ஆச்சரியப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

அறிவாலயம்
அதேபோல, சட்டப்பேரவையிலும் தேவையில்லாமல் யாரையும் புகழக்கூடாது என்றும் முதல்வர் கட்சியினருக்கு கண்டிப்பு உத்தரவு போட்டிருந்தார்.. இப்படிப்பட்ட சூழலில்தான் திருச்சியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்துள்ளது.. இதில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு பங்கேற்றிருக்கிறார்..

அமைச்சர் நேரு
அப்போது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள், நேருவை வரவேற்க 500 கிலோ பூக்கள், கயிறு மூலம் மெகா சைஸ் மாலை தயாரித்துள்ளனர்.. அந்த மாலை கருப்பு சிவப்பில் இருந்துள்ளது.. அந்த ஒரு மாலைக்கே 1 லட்சம் ரூபாய் செலவு செய்தார்களாம்.. ஆனால், அதை யாராலும் தூக்க முடியவில்லை.. எனவே, கிரேன் வைத்து, அந்த மாலையை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.. விழாவுக்கு வந்த அமைச்சர் இந்த மாலையை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்..

அறிவுரை
பிறகு விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து, "இப்படியெல்லாம் ஆடம்பரம் செய்யக்கூடாது என்று முதல்வர் ஏற்கனவே சொல்லி இருக்கிறாரே.. எதுவானாலும் எளிமையாக இருக்க வேண்டும்... இதெல்லாம் தேவையில்லாதது" என்று அறிவுறுத்திவிட்டு நகர்ந்து சென்றுவிட்டாராம்.. ஒருபக்கம் விழா ஏற்பாட்டாளர்கள் இதனால் ஏமாற்றமடைந்தாலும், ஒவ்வொரு அமைச்சர்களும் இப்படியே எளிமையை கடைப்பிடித்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பு முணுமுணுப்புகளும் எழுந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications