41 பேரை "அனுப்பிட்டு" அன்பு பற்றி விஜய் பேசலாமா? கோட் போட்ட CEO போல பேச்சு.. : அய்யநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோட்-சூட் அணிந்துகொண்டு கியூட்டாகப் பேசுவதில் எந்த அரசியல் அர்த்தமும் இல்லை.. கியூட் மற்றும் அன்பிற்கும் விஜய்யின் செயல்பாடுகளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.. 41 பேரை கரூரில் அனுப்பிவிட்டுட்டு அன்பு பற்றி விஜய் பேசலாமா?" என்று, மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ் நிறம் சேனலில் பேசியிருக்கும் அய்யநாதன், "விஜய்யின் பதிலுரை, மிகப்பெரிய உண்மையையும் ஜனநாயகத்தையும் அவமதிக்கும் வகையில் அமைந்திருந்தது.. முதலாவதாக, கடந்த காலத்தை சேர்ந்த சில விவகாரங்கள் மற்றும் திமுக தலைவர்கள் வெளியில் பேசிய பேச்சுக்களை அவைக்குள் கொண்டுவந்து விஜய் பேசியிருக்கிறார்.

CM Vijay 41 Deaths Controversy Vijay Controversy Ayyanathan Questions Vijay 41

3 அவமதிப்பு செயல்கள்

இரண்டாவதாக, வெளியில் பேசப்பட்ட விஷயங்களைச் சட்டமன்ற அவைக்குள் பேசக்கூடாது என்ற அடிப்படை விதிமுறையை மீறி விஜய் நடந்து கொண்டுள்ளார். மூன்றாவதாக, சர்க்காரியா கமிஷன் போன்ற நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படாத விவகாரங்களை உண்மை என்பது போலச் சித்தரித்து விஜய் அவையில் பேசியதை முதன்மை குற்றச்சாட்டாக முன்வைக்கிறார். கலைஞர் மற்றும் ஸ்டாலின் ஆகியோரை வில்லனாகக் காட்ட முயல்வது அவரது சினிமா மனநிலையையே காட்டுகிறது..

"ஆபாச நதி" எங்கே

"ஆபாச நதி" என்று பேசியதாக விஜய் சொல்கிறார்.. உண்மையிலேயே எப்போது ஆபாச நதி ஓடியது? விஜய்க்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை வந்தபோது, விஜய்க்கு நெருக்கமான ஜெகதீஷ் பழனிச்சாமி இயக்கிய 'ரூட் மாபியா' மூலமாக பரப்பப்பட்டதே உண்மையான ஆபாச நதி.. அதற்கு விஜய் கண்டனம் தெரிவிக்கவில்லையே.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தின்போது, விஜய்யின் ரசிகைகள் சிலர், "நாங்கள் விஜய்க்கு அக்காவாக, தங்கையாக இருப்போம், தேவைப்பட்டால் மனைவியாகக் கூட இருப்போம்" என்று பேசியதை விஜய் கண்டித்தாரா? அந்த பேச்சு பெண்களின் மாண்பை உயர்த்துவதா? தாழ்த்துவதா?

விஜய்யின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே பணம், செல்போன், பர்ஸ் திருட்டு போனதாக சொல்லியிருக்கிறார்.. அதனால் உள்கட்சி ஒழுக்கமே இல்லாத விஜய், ஒழுக்கத்தைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்..

114 நாட்களில் 530 குற்றச் செயல்கள்

விஜய் தனது உரையின் முதல் 15 நிமிடங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பற்றிப் பேசாமல், அதன் மாண்பைப் பற்றி மட்டுமே பேசுகிறார். 114 நாட்களில் 530 குற்றச் செயல்கள், 200 கொலைகள், 100-க்கும் மேற்பட்ட பாலியல் கொடுமைகள் மற்றும் 8 காவல்நிலைய மரணங்கள் எனப் பட்டியலிடப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்கு அரசால் முறையான பதிலளிக்க முடியவில்லை. அரசின் இந்த அமைதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை ஒப்புக்கொள்வது போல உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் நடந்த 100 நாட்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் அமைதியாக இருந்த தமிழ்நாடு, புதிய அரசு பதவி ஏற்ற மே 11ம் தேதியிலிருந்து ஏன் சீர்கெட்டது? சட்டமன்றத்தில் பேசிவிட்டுத் தப்பித்துவிடலாம் என்று நினைக்கிறார்.. ஆனால், இந்த ஆட்சியை காப்பாற்ற உதவி கொண்டிருப்பது சபாநாயகர்தான்.

முதலீடுகள் + பொருளாதார வளர்ச்சி

முதலீடுகள் வருவதும் பொருளாதார வளர்ச்சியும்தான் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதற்கான அத்தாட்சி என்றால், முந்தைய ஸ்டாலின் ஆட்சியில் 11.9% பொருளாதார வளர்ச்சி அடைந்ததும், ஐடி ஏற்றுமதியில் சாதனை படைத்ததும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததற்கான அத்தாட்சிதானே? சினிமாவில் 40 பேரை அடிப்பது போன்ற காட்சிகள் நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லை.. 115 நாள் ஆட்சியில் விஜய்யால் எதையும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.

ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், மாற்று சித்தாந்தம் கொண்டவர்களை அதாவது நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா போன்றோரை கட்சியில் சேர்த்தபோதே விஜய் ஒரு உண்மையான மதச்சார்பற்றவரோ அல்லது தமிழ்நாட்டிற்கான உண்மையான அரசியல்வாதியோ இல்லை என்பது தெளிவாகிவிட்டது.. முந்தைய ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு அமைதியாகவும், பெண்கள் பாதுகாப்பாகவும் இருந்தனர்.. ஆனால் இப்போது "சிங்கப்பெண்கள்" என்று பேசிக் கொண்டு சட்டசபையில் கோட்-சூட் போட்டுக் கொண்டு CEO போல விஜய் அளந்து விடுகிறார்..

கோட்-சூட் CEO

550 குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடியாத ஒரு அரசும், அதை வைத்திருக்கும் முதலமைச்சரும் தகுதியற்றவர்கள்.. கலைஞரை குறிவைத்து சர்க்காரியா கமிஷன் பற்றிப் பேசுபவர்கள், நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கும் நிலையில் இருக்கும்போது ஊழலைப் பற்றிப் பேசத் தகுதியில்லை

டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை (ED) வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது என்ற அடிப்படை அரசியல்/சட்ட நுணுக்கத்தைக் கூட விஜய்க்கு அவருடைய அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை..

தமிழர்கள் எங்கே

8 கோடி தமிழர்களைக் காக்கப்போவதாகப் பேசும் விஜய்யைச் சுற்றி தெலுங்கு பேசும் நபர்களே அதாவது விஷ்ணு ரெட்டி, அனில் ரெட்டி, ஆதவ் அர்ஜுனா போன்றோர்தான் இருக்கிறார்கள்.. இப்படித்தான், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவையோ அல்லது கேரள முதலமைச்சரையோ சுற்றித் தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா அல்லது வேறு மாநிலத்தவர்கள் சிறப்புப் பிரதிநிதிகளாக இருக்கிறார்களா?

கோட்-சூட் அணிந்துகொண்டு கியூட்டாகப் பேசுவதில் எந்த அரசியல் அர்த்தமும் இல்லை.. கியூட் மற்றும் அன்பிற்கும் விஜய்யின் செயல்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.. 41 பேரை அனுப்பிவிட்டுட்டு அன்பு பற்றி பேசலாமா?" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+