பிரைவேட் ஜெட்டில் சிஎம் விஜய்! லைவில் ட்ராக் செய்த 3900 பேர்! விலையைக் கேட்டால் அசந்து போயிருவீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்திருக்கிறார் முதல்வர் விஜய். VT-KJR - Embraer Legacy 650 business jet (E35L) என்ற பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்தார் முதல்வர் விஜய். இந்த ஒரு பயணத்துக்கு மட்டும் அவர் 14 லட்சம் ரூபாய் செலவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது அவர் பயணம் செய்த தனி விமானத்தின் மதிப்பு 250 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது. முக்கியமாக விஜய் பயணம் செய்ததை சுமார் 3900 பேர் லைவில் டிராக் செய்து இருக்கிறார்கள்.

நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்து தற்போது தமிழ்நாட்டின் முதல்வராகி இருக்கிறார் முதல்வர் விஜய். கட்சியின் 2வது மாநில மாநாடு நடைபெற்ற மதுரைக்கு முதல்வராகி முதன்முறையாக வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Private Jet Madurai

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தான் இந்த பயணம். 2026 தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.

அதாவது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்ட நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பும் வெளியானது. தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் டென்டரில் பங்கேற்ற நிலையில் பிரபலமான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு பைசாவுக்கு மோதிரத்தை செய்து தர ஒப்புக்கொண்டது.

தொடர்ந்து கல்யாண் ஜூவல்லசும் இந்த டெண்டரில் பங்கு எடுத்தது. 70க்கு 30 என டெண்டர் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது மோதிரங்கள் தயார் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், தாய் சேய் நல மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தை இன்று மதுரையில் தொடங்கி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவரை தொண்டர்கள் நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். இதற்கு இடையே விஜய் பயணத்தில் ஒரு சுவாரசிய தகவல் கிடைத்திருக்கிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு அவர் TAJ ஜெட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானVT-KJR - Embraer Legacy 650 business jet (E35L) என்ற விமானத்தின் மூலம் பயணித்தார்.

Vijay Private Jet Madurai

சென்னையிலிருந்து மதுரை செல்லும் வரை இந்த விமானத்தை அதிகபட்சமாக 3910 பேர் பிலைட் ராடார் என்ற ஒரே ஒரு வலைதளத்தின் மூலம் ட்ராக் செய்து இருக்கின்ற. இதை தவிர பல விமான ட்ராக் வலைதளங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 10,000 மேற்பட்டோர் அவரது பயணத்தை ட்ராக் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தற்போது இந்த விமானத்தின் மதிப்பு 135 முதல் 140 கோடி ரூபாய் வரை இருக்கலாம். ஆனால் 12 ஆண்டுகளுக்கு முன்பு டைட்டன் ஏவிகேஷன் தயாரித்த இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை பயணம் செய்ய இந்த விமானத்துக்கு தொலைவை பொறுத்து 14 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+