சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் கொரோனா பரவல்... கர்நாடகாவில் குறைகிறது... தமிழகத்தில்... ஒரு பார்வை!!

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் விரைவாக குறைந்து வருகிறது. ஆனால், மறுபக்கம் ஜூன் மாதத்தில் இருந்து தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறுகிய காலத்தில் அதிகரித்து, பின்னர் குறைந்து, ஆனால், கடந்த சில நாட்களாக நிலையாக இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

கர்நாடகாவில் தினமும் அதிகரித்து ஜூலை 4 ஆம் தேதி 8.82 சதவீதம் என்ற அளவில் அதிகபட்சமாக அதிகரித்தது. அதன் பின்னர் விரைவாக இறங்கத் துவங்கியது. ஆனாலும் எண்ணிக்கையில் என்று பார்க்கும்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் 4,500 என்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி இருந்தது.

வேறு வழியே இல்லை.. இதுதான் முக்கிய கட்டம்.. தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு மிக அவசியம் வேறு வழியே இல்லை.. இதுதான் முக்கிய கட்டம்.. தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு மிக அவசியம்

ஆந்திராவில் ஏறுமுகம்:

ஆந்திராவில் ஏறுமுகம்:

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை கர்நாடகாவில் அதிகரித்து வந்தது. ஆனால், தற்போது இறங்கி வந்துள்ளது. இந்த இடத்தை ஆந்திரப் பிரதேசம் எடுத்துக் கொண்டுள்ளது. ஆந்திராவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் எண்ணிக்கை உயர்வு 8.12 சதவீத அளவு என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இந்த மாத துவக்கத்தில் கூட வெறும் 5.7 என்ற சதவீதத்தில் தான் ஆந்திராவில் கொரோனா பாதிப்பு விகிதம் இருந்தது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கர்நாடகாவில் இதுதான் மேஜிக்:

கர்நாடகாவில் இதுதான் மேஜிக்:

கர்நாடகா, டெல்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பரிசோதனை அதிகரித்து வருகிறது. தொடர்பில் இருப்பவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிப்பது என்று அடுத்த கட்டத்தில் இருந்தாலும் கூடிய விரைவில் கட்டுக்குள் வரலாம் என்று நம்பப்படுகிறது.

டெல்லிக்கு டாடா வைக்கிறதா கொரோனா:

டெல்லிக்கு டாடா வைக்கிறதா கொரோனா:

கடந்த ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பின்னர் டெல்லியில் திங்கள் கிழமை (நேற்று) 1000த்துக்கும் குறைவான எண்ணிக்கை பதிவாகி உள்ளது. உச்சபட்சமாக ஜூன் 23 ஆம் தேதி 4,000 எண்ணிக்கை பதிவாகி இருந்தது. ஜூன் ஒன்றாம் தேதி தொற்று பரவல் 990 என்ற அளவிலும், நேற்று வெறும் 954 என்ற அளவிலும் பதிவாகி இருந்தது. டெல்லியில் மொத்தமாக இதுவரை 1.23 லட்சம் கொரோனா தொற்று நோயாளிகள் பதிவாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 10,000 என்ற அளவில் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும்போது, இதே கால கட்டத்தில் மகாராஷ்டிராவில் 57,000 என்ற அளவிலும், தமிழகத்தில் 32,000 என்ற அளவிலும் பதிவாகி இருக்கிறது.

தமிழத்தின் நிலை இது:

தமிழத்தின் நிலை இது:

தமிழகத்தில் இந்த மாத துவக்கத்தில் இருந்து பெரிய அளவில் அதிகரிக்காமலும், தொற்று 3,500 முதல் 5,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது. தற்போது 1.75 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. அதிகரிக்கும் விகிதம் மூன்று சதவீதம் குறைந்து வருகிறது.

பீகாரில் அதிகரிப்பு:

பீகாரில் அதிகரிப்பு:

உத்தரப்பிரதேசத்தில் தற்போது 51,000 பேருக்கு தொற்று உள்ளது. இந்த மாநிலத்தில் தொற்று விகிதம் 4.29 என்ற விகிதமாக குறைந்து வருகிறது. இதற்கு மாறாக பீகாரில் 28,000 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. பரவல் விகிதம் 7 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது. அதேசமயம் இந்த மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை பரவல் இதுவரை இருந்ததை விட மூன்று சதவீதம் அதிகரித்து வருகிறது.

மேற்குவங்கத்தில் கொரோனா பரவல்:

மேற்குவங்கத்தில் கொரோனா பரவல்:

மேற்குவங்க மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை 45,000 ஆக இருக்கிறது. ஆனால், தினமும் தொற்று பரவல் 5.7 சதவீதமாக இருக்கிறது. இத்துடன் கேரளாவில் தினமும் தொற்று பரவல் சதவீதம் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 6.9 சதவீதம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. ஆனால், குறைந்த அளவிலான எண்ணிக்கைதான் இதுவரை இந்த மாநிலத்தில் பதிவாகி இருக்கிறது. இதுவரை இந்த மாநிலத்தில் மொத்தம் 13,000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அப்டேட் இந்தியா:

கொரோனா அப்டேட் இந்தியா:

நாடு முழுவதும் திங்கள் கிழமை (நேற்று) தொற்று பரவல் 37,000 என்ற அளவில் காணப்பட்டது. அதற்கு முந்தைய நாள் 40,000 என்று பதிவாகி இருந்தது. நாட்டில் இதுவரை 11.55 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.24 பேர் மீண்டு வந்துள்ளனர். உயிரிழப்பு 28,084 ஆக இருக்கிறது.

இடம் தொற்று எண்ணிக்கை மீட்பு குணமடைந்தது
மகாராஷ்டிரா 3.10 லட்சம் 1.70 லட்சம் 11,854
தமிழ்நாடு 1 .76 லட்சம் 1.22 லட்சம் 2551
டெல்லி 1.23 லட்சம் 1.03 லட்சம் 3,628
மும்பை 84,524 55, 884 4,899
சென்னை 79,662 62,552 1,295

English summary
Compare with Tamil Nadu, Delhi Coronavirus reducing in Karnataka is falling down
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X