சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நைட்ல ரவுடிகளை ஏவி மிரட்டல்".. நடிகை ஜெயலட்சுமி மீது கந்து வட்டி புகார் அளித்த பெண்.. பிளாஷ்பேக்!

Google Oneindia Tamil News

சென்னை: பாடலாசிரியர் சினேகனின் பெயரில் பணம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்ட பாஜகவை சேர்ந்த சீரியல் நடிகை ஜெயலட்சுமி கடந்த ஆண்டு கந்து வட்டி கேட்டு ரவுடிகளை விட்டு மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் எழுந்தது.

Recommended Video

    Snekan | Coffee Shop போலாம்ன்னு கூப்பிடுறாங்க, Serial நடிகை இப்படி பண்ணலாமா ? *Tv

    சீரியல் நடிகை ஜெயலட்சுமி, இவர் பாஜகவில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்பு இணைந்தார். சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பாடி பகுதி மக்களால் அறியப்படுகிறார்.

    இவர் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட பாடி 90ஆவது வார்டில் போட்டியிட்டார். இந்த நிலையில் இவர் மீது நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் புகார் அளித்துள்ளார்.

    ஆளும் கட்சிக்கே ஷாக் கொடுத்த பாஜக! அண்ணாமலையின் பக்கா மூவ்! கடலூரில் கொத்தாய் சேர்ந்த '35’ பேர்!

    சினேகம் பவுண்டேஷன்

    சினேகம் பவுண்டேஷன்

    அந்த புகாரில் கடந்த 2015 ஆம் ஆண்டு சினேகம் பவுண்டேஷனை எனது சொந்த பணத்தில் நடத்தி வருகிறேன். இந்த அறக்கட்டளை மூலம் மக்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து வருகிறேன். நான் இதற்கு முறையாக வருமான வரியையும் செலுத்தி வருகிறேன். அதற்கு என்னிடம் ஆதாரங்களும் உள்ளன.

    சமூகவலைதளங்கள்

    சமூகவலைதளங்கள்

    சமூகவலைதளங்களில் என்னுடைய பெயரை பயன்படுத்தி பணம் மோசடி செய்வதாக என் நண்பர்கள் எனக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மக்களிடம் பணம் வசூலித்து அறக்கட்டளை நடத்துகிறீர்களா என வருமான வரித் துறையினர் என்னை தொடர்பு கொண்டு கேட்டனர். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    நடிகை ஜெயலட்சுமி

    நடிகை ஜெயலட்சுமி

    பின்னர்தான் எனது அறக்கட்டளையின் பேரில் நடிகை ஜெயலட்சுமி பணம் வசூல் செய்தது தெரியவந்தது. அவர் மீது புகார் கொடுத்துள்ளேன் என்றார் சினேகன். நடிகை ஜெயலட்சுமி மீது பண மோசடி மட்டுமல்ல கடந்த ஆண்டு கந்துவட்டி புகாரும் எழுந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாடியை சேர்ந்த கீதா என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

    மகளிர் சுய உதவிக் குழுக்கள்

    மகளிர் சுய உதவிக் குழுக்கள்

    அதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாக கூறினார். இதையடுத்து சில நாட்கள் கழித்து எங்களது விண்ணப்பங்கள் கேன்சல் ஆகிவிட்டதால், தொழில் தொடங்க தேவையான பணத்தை தானே தருவதாக கூறினார். அந்த பணத்திற்கு வட்டியும் அசலும் செலுத்தி விட்ட நிலையில் இதுவரை செலுத்தியது வட்டி என்றும் மேலும் அசலை செலுத்த வேண்டும் என மிரட்டுகிறார் என ஜெயலட்சுமி மீது கந்து வட்டி புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Complaint against Actress Jayalakshmi in Usury interest given by the one Geetha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X