Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புண்படுத்திட்டாங்க.. வயசானவங்கள ‘தாய்க்கிழவி”னு கிண்டல் செய்றாங்க.. தனுஷுக்கு எதிராக கிளம்பிய புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை :நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள 'தாய்கிழவி' பாடல் வயதானவர்களை இழிவுபடுத்துவது போல் இருப்பதாகவும், பாடல் எழுதி பாடி தவறான முன்னுதாரணமாகியுள்ள நடிகர் தனுஷ் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மித்ரன் R. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். அந்தப் படத்தில் இடம்பெறும் தாய்க்கிழவி என்ற பாடலை நடிகர் தனுஷே எழுதி பாடியுள்ளார். நாட்டாமை படத்தில் வில்லன் நடிகர் பொன்னம்பலம் கூறிய தாய்கிழவி வார்த்தைடை இன்ஸ்பிரேஷனாக வைத்து இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் மூலம் அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமானார். இதற்கு பிறகு அவர்கள் கூட்டணியில் வெளியான வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் உள்ளிட்ட அனைத்து படங்களின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. அந்தப் பாடலுக்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை கிடைத்து வருகின்றன.

தாய்க்கிழவி

தாய்க்கிழவி

இந்நிலையில் இந்த பாடலை எழுதிய நடிகர் தனுஷ்க்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," வயதான உறவுகளை தாத்தா, பாட்டி என மரியாதையோடு முறை சொல்லி அழைத்து மகிழ்ந்த காலம் போய் தற்போது அதனை இந்த தலைமுறை சீரழிக்கும் வகையில் #கிழவி #தாய்க்கிழவி பாடல் உள்ளது.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

தரக்குறைவான வரிகளைக் கொண்டு #திருச்சிற்றம்பலம் படத்திற்காக பாடல் எழுதி பாடி தவறான முன்னுதாரணமாகியுள்ள நடிகர் தனுஷ் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

பாடலை நீக்க வேண்டும்

பாடலை நீக்க வேண்டும்

வளரும் தலைமுறையினர் மத்தியில் மூத்த வயதான உறவுகளை தவறாக அழைக்கும் எண்ணத்தை விதைக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் உள்ள அந்த பாடலில் வரும் கிழவி, தாய்க்கிழவி எனும் வரிகளை உடனடியாக நீக்கி விட்டு பாடலை வெளியிட வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+