உங்களின் சிறு உதவி..இதய நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது ஈஸ்வரன் உயிர் பிழைக்க உதவும்
சென்னை: 4 வயதே ஆன சிறுவன் ஈஸ்வரனுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு இருந்ததால் தற்போது அவனுக்கு செய்யப்பட உள்ள ஆபரேஷனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகாவை சேர்ந்த சிங்காரப்பேட்டை நகரம் அருகே உள்ள வேல்கோட்டை கிராமத்தை சேர்ந்த தம்பதி தனபால்- பாக்யலட்சுமி. இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியின் முதல் மகன் ஈஸ்வரன். தற்போது சிறுவன் ஈஸ்வரனுக்கு 4 வயது ஆகிறது.

ஈஸ்வரன் 8 மாத கைக்குழந்தையாக இருக்கும் போது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். உடனே அவரது பெற்றோர்கள் ஈஸ்வரனை ஒரு குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச்சென்றனர். அப்போதுதான் ஈஸ்வரனுக்கு பிறவியிலேயே இதயக்கோளாறு (congenital heart defect) மற்றும் Down's syndrome குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தை ஈஸ்வரனை பல முன்னணி மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர். இறுதியில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்குள்ள மருத்துவர்கள் மியாட் மருத்துவமனையில் சிறுவனை சேர்க்குமாறு அறிவுறுத்தினர்.
இதன்படி மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு Large perimembranous VSD, Severe Pulmonary hypertension பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் PA Banding சிகிச்சைக்கு பிறகு Cardiac Catheterization-சிகிச்சையும் சிறுவனுக்கு தேவைப்படுகிறது.

அறுவை சிகிச்சை, ஐசியூ, மருத்துவமனையில் தங்கியிருப்பதற்கான செலவு, ஆப்ரஷேனுக்கு பிறகான கண்காணிப்பு மற்றும் மருந்துகள் என மொத்தம் ரூ.3,25,000- செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஈஸ்வரனின் பெற்றோரிடம் இவ்வளவு பணம் இல்லை. அவர்களின் குடும்பம் வறுமையான குடும்பம்.
ஈஸ்வரனின் அப்பா சாதாரண விவசாயி ஆவார். ஈஸ்வரனின் சிகிச்சைக்கு அவரின் பெற்றோரால் பணம் கொடுக்க முடியாத நிலையில், நீங்கள் நினைத்தால் இந்த சிறுவனுக்கு உதவலாம். நீங்கள் மனது வைத்தால் இந்த சிறுவனுக்கு உடனே ஆப்ரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த சிறுவனுக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள்.
உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்து, இந்த சிறுவனின் சிகிச்சைக்கு பணம் திரட்ட உதவிடுங்கள்!
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications