Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக தரும் ஆக்சிஜனில்தான் பாஜக வாழ்கிறது! அண்ணாமலைக்கு சரமாரி பதிலடி தந்த திருநாவுக்கரசர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் ஆக்சிஜனில் தான் பாஜக உயிர் வாழ்கிறதா என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.59 கோடி சொத்து சேர்த்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு இடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் காமராஜ் வீட்டிற்கு சோதனை செய்ய வந்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் நிலையில் ஐடி அதிகாரிகள் காமராஜ் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக தரப்பில், இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சிக்கப்பட்டது.

 ரெய்டு சரியா?

ரெய்டு சரியா?

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசரிடம் ரெய்டு நடத்துவது சரியா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மாநில அரசு, மத்திய அரசு ஆகியவை பழிவாங்கும் நோக்கோடு ரெய்டு நடத்தக் கூடாது. உண்மையை ஆராய்ந்து சோதனை செய்யப்பட வேண்டும். இதனால் மொத்தமாக ரெய்டு நடத்தக் கூடாது என்றும் சொல்ல முடியாது, அதேபோல் தொடர்ந்து ரெய்டு நடத்துங்கள் என்றும் கூற முடியாது. தவறுகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 பாஜக மீது விமர்சனம்

பாஜக மீது விமர்சனம்

தொடர்ந்து திமுக ஆக்சிஜனில் மட்டுமே காங்கிரஸ் உயிர் வாழ்வதாக கூறிய அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், அதிமுக ஆக்சிஜனில் தான் பாஜக உயிர் வாழ்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவின் ஆக்சிஜனில் பாஜக உயிர் வாழ்கிறது என்பதை ஒப்புக்கொண்டுவிட்டு, இந்த விமர்சனத்தை அண்ணாமலை கூற வேண்டும் என்று தெரிவித்தார். அதேபோல் தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே போல் ஒருவர் உருவாகுவதற்கு வாய்ப்பே இல்லை. இதுவரை கர்நாடகாவில் தொடர்ந்து 10 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கவிழ்த்துள்ளது. அதன்பின்னர் குதிரைபேரம் உள்ளிட்டவை மூலம் ஆட்சியமைத்துள்ளது. மகாராஷ்டிரா போல் ஷிண்டே வருவார் என்று கூறுவது கற்பனையாக மட்டுமே கூற முடியும் என்று விமர்சித்தார்.

 தமிழ்நாட்டை பிரிக்க வாய்ப்பில்லை

தமிழ்நாட்டை பிரிக்க வாய்ப்பில்லை

அதேபோல் தனி தமிழ்நாடு என்று உருவாகுவதற்கு வாய்ப்பு இல்லை. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படும். அதேபோல் தமிழ்நாடும் பிரிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் ஒருவரே விளக்கமளித்துவிட்டார். தெலங்கானா மற்றும் ஆந்திரா தனித்தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதற்கு கலாச்சாரம் காரணம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கலாச்சாரங்களில் மாறுபாடு இல்லை. அதனால் தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.

Recommended Video

    ADMK முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை... என்ன காரணம்? *Politics
     சிலிண்டர் விலை உயர்வு

    சிலிண்டர் விலை உயர்வு

    மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் நிதி பிரச்னை ஏற்படுகிறதோ, அப்போது எல்லாம் மக்களின் பாக்கெட்டில் இருந்து பணம் எடுப்பது போல் விலைவாசியை உயர்த்தி வருகிறது. எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மட்டுமல்ல, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். அதேபோல் ஜிஎஸ்டி வரியும் பணக்காரர்களுக்கு சாதகமாக குறைக்கப்படுகிறது. ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில். ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+