75 நாட்களாக ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை? புயலை கிளப்பும் செல்வப்பெருந்தகை!
சென்னை: 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை வினவியுள்ளார்.
தனது நீண்டகால நண்பரான ஜெயலலிதாவை, சக்தி வாய்ந்த பிரதமர் பதவியில் உள்ள மோடி நேரில் வந்து பார்த்து, அவரது உடல்நலம் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து நலம் விசாரித்து சென்றதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
தேர்தலை சந்திக்கும் குஜராத்துக்கு ஜாக்பாட்! ரூ15,670 கோடி திட்டங்கள்- இன்று தொடங்கி வைக்கும் மோடி!

நெருங்கிய நட்பு
''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக என்ற தமிழகத்தின் பிரதான கட்சியின் தலைவர் ஜெயலலிதா, முதல்வராக இருந்தவர். அவருக்கே முறைப்படி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் நெருங்கிய நட்பு உண்டு.''

75 நாட்கள் மருத்துவமனையில்
''மோடி குஜராத் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் மூன்று முறை நேரில் பங்கேற்றவர். 2011-ல் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி வந்திருந்தார். குஜராத் முதல்வராக இருந்தபோதும், பிரதமராக இருந்தபோதும் மோடிக்கு தனது போயஸ் தோட்ட இல்லத்தில் விருந்தளித்தவர் ஜெயலலிதா. ஆனாலும், அவர் 75 நாட்கள் மருத்துவமனையில், எப்படி இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் சிகிச்சை பெற்றபோதும் பிரதமர் மோடி நேரில் வந்து பார்க்கவில்லை.''

ராகுல் வந்தார்
''அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வுக்கு நேர் எதிரணியில் இருந்தாலும், ராகுல் காந்தி நேரில் வந்து உடல்நலம் விசாரித்துச் சென்றார். தனது நீண்டகால நெருங்கிய நண்பரான ஜெயலலிதாவை, சக்தி வாய்ந்த பிரதமர் பதவியில் உள்ள மோடி நேரில் வந்து பார்த்து, அவரது உடல்நலம் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மக்களுக்கு உண்மைகளை தெரிவித்திருந்தால், இன்றைய சிக்கல்களே எழுந்திருக்காது. ''

மோடி ஏன் வரவில்லை?
''எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து நலம் விசாரித்தார். அவரது முயற்சியாலேயே எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். அதுபோல, பிரதமர் மோடி, ஜெயலலிதாவா நேரில் வந்து பார்த்திருந்தால், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற சந்தேகங்கள் தற்போது தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications