சோனியா காதுக்கே போன விஷயம்.. ஜோதிமணிக்கு காத்திருக்கும் "முக்கிய தகவல்.." பரபரக்கும் காங்கிரஸ்
சென்னை: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு அதிருஷ்டம் காத்திருப்பதாக கூறுகிறார்கள், அந்த கட்சி வட்டாரத்தில். பலமான ரெக்கமென்டேஷன் சோனியா காந்தி காதுகளுக்கு போயுள்ளது இதற்கு காரணமாம்.
வடக்கில் நடக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் சில மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிய தலைவரை நியமிக்கும் முடிவில் இருக்கிறாராம் சோனியாகாந்தி.
அப்படி நியமிக்கப்படும் போது , தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிதான் முதலில் மாற்றப் படுவார் என்கின்றனர்.

கே.எஸ்.அழகிரி மாற்றம்
அழகிரி மாற்றம் கடந்த ஒன்னரை வருடங்களாக பேசப்பட்டு வரும் சங்கதிதான். ஆனால், இந்த முறை இது உறுதியாகியிருக்கிறதாம். இதற்கு காரணம், இதுவரை அழகிரியை மாற்றி விட்டு யாரை புதிய தலைவராக கொண்டு வர நாம் சிபாரிசு செய்வது என்பதில் ப.சிதம்பரம் அக்கறைக் காட்டாமல் இருந்து வந்தார். தற்போது சிபாரிசு செய்ய முடிவு செய்து விட்டாராம் ப.சி. !

சிதம்பரம் ஆதரவு?
அவரும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் கரூர் எம்.பி. ஜோதிமணிக்கு பச்சைக் கொடியை காட்டுகிறார்கள். ஆக, சோனியாவிடம் ஜோதிமணிக்கு சிபாரிசு செய்திருக்கிறாராம் ப.சிதம்பரம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், திமுகவோடு இணைந்து அரசியல் செய்பவர்களாக பார்த்துத்தான் காங்கிரசுக்கு தலைவர் நியமிக்கப்படுவார். அப்படியிருக்கையில், திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியோடு முரண்பட்டு இருக்கும் ஜோதிமணியை திமுக தலைமைக்கு பிடிக்காத நிலை இருக்கும் போது ஜோதிமணி நியமிக்கப்படுவாரா ? என்ற சந்தேகம் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் இருக்கிறது.

கூட்டணி நிலவரம்
அதேசமயம், திமுகவுக்கு பிடிக்காத திமுகவோடு மல்லுக்கட்டும் ஜோதிமணியை புதிய தலைவராக கொண்டு வர சிதம்பரமும் அவரது மகனும் விரும்புவதால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வந்தாலும் பரவாயில்லை என நினைக்கிறார்களா? அல்லது ஜூனில் நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் தனக்கு எதிராக அழகிரி சீட் வாங்கிடக்கூடாது என சிதம்பரம் நினைக்கிறாரா? என்கிற விவாதம் காங்கிரஸ் மேலிடத்தில் எதிரொலிக்கிறது.

செந்தில் பாலாஜி
ஜோதிமணி நாடாளுமன்றத்திலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்தான். ஆனால் தனது தொகுதியான கரூரில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அவருக்கு இணக்கம் இல்லை. கடந்த சட்டசபை தேர்தல் காலத்தில், இருவருக்கும் இணக்கமான சூழ்நிலை இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், இப்போது விரிசல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தின்போது திமுகவினர் ஜோதிமணியை வெளியே அனுப்பியதாகவும், அதை எதிர்த்து ஜோதிமணி வீதியில் கோஷமிட்டதும் இந்த விரிசலை அம்பலப்படுத்தியது நினைவிருக்கலாம்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications