கல்வி நிறுவனங்களில் காவிக்கொடி...லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த மாணிக்கம் தாகூர்
கர்நாடகாவில் கல்வி நிறுவனத்தில் காவிக்கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பாக லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்.
சென்னை: கர்நாடகாவில் தேசிய கொடி கம்பத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த மாதம் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய பிரச்சனை உருவானது. அங்குள்ள அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த போது வகுப்பில் அமர கூடாது என கல்லூரி நிர்வாகம் கூறியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ-மாணவியர்களை சிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கினர்.

ஹிஜாப்
உச்சகட்டமாக இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து காவி துண்டு அணிந்திருந்த இந்துத்துவ மாணவர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறினர். உடனே வெகுண்டெழுந்த அந்த மாணவி அல்லாஹு அக்பர் என முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

காவிக்கொடி
இந்த நிலையில் உச்சகட்ட பரபரப்பாக கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்தது.கல்லூரி வளாகத்தில் இருந்த தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்த கம்பத்தில் ஏறிய மாணவர் ஒருவர் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவி கொடியை பறக்கவிட்டுள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
அப்போது அங்கு இருந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறது.

லோக்சபாவில் ஒத்திவைப்பு
ஹிஜாப் விவகாரம் ராஜ்யசபா, லோக்சபாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சியினர் ராஜ்யசபாவில் இருந்தும் லோக்சபாவில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர், இதனிடையே கர்நாடகாவில் தேசிய கொடி கம்பத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications