காமராஜருக்கு நெருக்கம்! அப்பழுக்கற்ற அரசியல்வாதி.. தீவிர காங்கிரஸ்காரர்.. யார் இந்த குமரி அனந்தன்?
சென்னை: காங்கிரஸ் கட்சியின் முது பெரும் தலைவராக இருந்த குமரி அனந்தன் காலமானார். 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். காமராஜருக்கு நெருக்கமாகவும், அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகவும், தீவிர காங்கிரஸ்காரராகவும் இருந்த குமரி அனந்தன் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முது பெரும் தலைவராக இருந்தவருமான குமரி அனந்தன் காலமானார். 93 வயதில் வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த குமரி ஆனந்தன் காலமானார். மிக நீண்ட அரசியல் பயணம் கொண்ட குமரி ஆனந்தன் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.

குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர். தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியாக திகழ்ந்த இவர், பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை கொண்டவர். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் எம்பி, எம்.ஏல்வாகவும் இருந்துள்ளார். 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குமரி அனந்தன்.
2004 ஆம் ஆண்டு தமிழக அரசின் தகைசால் விருது இவருக்கு வழங்கப்பட்டது. விமானத்தில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர் இலக்கிய செல்வர் குமரி அனந்தன்.
தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர். இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி, என்று பன்முகத் திறன் கொண்டவர். மேலும் மதுவிலக்கு, பனை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தினார்.
இவர் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் சொந்த அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. குமரி அனந்தனின் மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக மூத்த தலைவராக உள்ளார்.
திருவொற்றியூர், ராதாபுரம் சாத்தான்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் .1980 காலக் கட்டத்தில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கினார். திருவொற்றியூர் தொகுதியில் 1980ல் இந்த கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றார். பின்னர் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். அதன்பிறகு கடைசி வரை காங்கிரஸ் கட்சி தொண்டராக இருந்தார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications